FKart PrmotionalBanners

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்


நான் ஆட்டோ கன்சல்டன்ஸியில் ஏஜென்டாகவும் (ஆர்.டி.ஓ ஏஜென்ட்) அதில் புரோக்கராகவும் வேலை பார்த்து வருகிறேன். என் வருமானத்திற்கு மேல் செலவு ஏற்படுகிறது. எனக்கு கௌரவமான வேலை கிடைக்குமா? பொருளாதார நிலை சரியாகுமா? என்று சொல்லுங்கள்.
& டி.நாராயணன், நாகர்கோவில்.

கம்பிமேல் நடப்பது போன்றது உங்கள் வேலை. உங்கள் பேச்சே சிலசமயம் சண்டையாக முடிந்து விடும். அந்த குணம் இந்த வேலைக்கு ஒவ்வாததாகும். நீங்கள் பிறந்த இந்த 29ம் தேதியில் ஜாலவித்தைக்காரர்கள் அதிகம் பிறந்துள்ளனர். பிறரை துன்புறுத்தாத வாய்ப்பேச்சு கொண்ட உங்களுக்கு விரைவில் பதவி உயர்வையும் பணப் பெருக்கத்தையும் நிச்சயம் கொடுத்துவிடும். இதே அலுவலகத்தில் மேல்பதவியை அடையவும் முடியும். உங்கள் ராசியிலிருந்து ஐந்திற்கு வரவிருக்கும் ராகு மற்றும் பத்துக்கு வரவிருக்கும் குருவிற்கும் பரிகாரமாக நாகர்கோவிலில் உள்ள புற்று
கோயிலுக்கு வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் நிறைய பால் வாங்கிக் கொடுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை குறைந்தது 11 முறையாவது தினமும் சொல்லுங்கள்.

அர்த்த காயம் மஹாவீர்யம்
சந்த்ர ஆதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்

என் பிறந்த தேதி 12.5.1977. எனது வாழ்க்கை நிலை உயருமா?
& ஜனாப் பஷீர் அகமது, திருவாரூர்.
சிறந்த அறிவாளியான நீங்கள், பல நேரம் குழப்பமடைவீர்கள். உங்களுக்கென்று அழுத்தமான கொள்கை கோட்பாடு உண்டு. சாம்பல் நிற ஆடையை அவ்வப்போது உடுத்துங்கள். தூக்கமின்மை வரும்போது கசகசாவுடன் கற்கண்டை பொடி செய்து கலந்து இரவு படுக்கும்போது சாப்பிடுங்கள். கீழ்க்கண்ட இந்தப் பாடலை தினமும் 23 முறை பாடுங்கள்.
செங்கதிர் தேவன்
சிறந்த ஒளியினை
எங்கள் அறிவைத் தூண்டி நடத்த
தேடுகின்றோம் அவன் திருவடியை!

நான் 21.7.1972ம் ஆண்டு பிறந்தேன். எங்களுக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அதற்குப்பிறகு பத்து வருடங்களாக வாரிசு இல்லை. பரிகாரம் கூறுங்கள்.
&நாகராஜன், தோகைமலை.

வெள்ளியாலான சிறிய அளவில் நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் பிரதிமைகளை வாங்கிக் கொள்ளுங்கள். கோயில்களில் உண்டியலில் கண்மலர் என்று சொல்லி போடுவார்கள் அல்லவா அதுபோன்ற அளவு இருந்தால் போதுமானது. ஒரு புரோகிதரைக் கொண்டு கறுப்புத் துணியில் 2 கிலோ கறுப்பு எள்ளைப் பரப்பி அதன் மீது அந்தப் பிரதிமைகளை வையுங்கள். உங்கள் குடும்பத்தில் மறைந்தோரை அதில் ஆவாஹனம் செய்யச் சொல்லுங்கள். அதாவது அந்த பிரதிமைக்குள் அவர்களை சூட்சுமமாக வந்து அமர்த்துதல் என்று பொருள். மீண்டும் நெல், கறுப்பு எள்ளைக் கொண்டு வெள்ளி உருவங்களின் மீது கீழ்க்காணும் மந்திரங்களை 3000 முறை சொல்லச் சொல்லி அர்ச்சனை போல செய்யச் சொல்லுங்கள். முடித்தவுடன் துணி, எள், பிரதிமைகள் மூன்றையும் ஏதேனும் கோயில்களில் உள்ள குளத்தில் விட்டுவிடுங்கள்.

யேகேசித் ப்ரேத ரூபேண
வர்த்தத்தே பிதரோ மம!
தே ஸர்வே த்ருப்திம் ஆயாந்து
வ்ரீஹிபி: திவ மிச்ரிதை:

எனது மகள் பிறந்த தேதி 8.6.1989. அவளுக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பதால் மாமியார் இல்லாத வீட்டுக்குதான் பெண் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சரியா?& புவனேஸ்வரி.ஆயில்யத்தில் பிறந்தவர்கள் பேச்சு வன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆயில்யம் 1ம் பாதத்திற்கு குரு அதிபதியாகிறார். சத்தியம் தவறாது நடப்பர். 2, 3 பாதங்களுக்கு சனி அதிபதியாக வருகிறார். எதிரிகளை எளிதில் சமாளிப்பார்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் மட்டும் பரிகாரம் செய்து கொண்டால் நல்லது. திருமணமானதும் அம்பாளுக்கு புடவை சாற்றுவதாக வேண்டிக் கொண்டாலே போதும். மாமியார் இல்லாத வீடாக பார்க்க வேண்டும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

எனக்கு முதல் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தது. பல்வேறு பிரச்னைகளால் பிரிந்து விட்டோம். இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு பணப் பிரச்னையாலும் கடனாலும் அவஸ்தைப்படுகிறோம். இதனாலேயே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஏன் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது? பிரச்னை தீர பரிகாரம் கூறுங்கள். & கிருபாலட்சுமி, மதுரை.சனி பகவான் அருளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமையன்று மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துங்கள். எந்த ஆங்கில மாதத்திலும் 8ம் தேதியில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மதுரைக்கு வடமேற்கில் சோழவந்தான் சாலையில் 19 கி.மீ. தொலைவில் திருவேடகம் எனும் தலம் உள்ளது. திருஞானசம்பந்தர் சைவத்தின் மேன்மையை உலகத்தாருக்கு உணர்த்த வேண்டி வைகையில் எறியப்பட்ட ஏடு, ஆற்று நீரை எதிர்த்து நின்ற தலம் இது. மனக்குறைகளை நீக்கும் சிறப்பான தலம். அத்தலத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கீழே உள்ள பாடலை 21 முறை தினமும் கூறுங்கள். மந்திரம் ஆன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே!

Comments