FKart PrmotionalBanners

சிவ தரிசனத்தின் போது பாட வேண்டிய பாடல்

ஆலய வழிபாடு செய்யும்போது அருளாளர்கள் ஐந்து புலன்களையும் அடக்கி, இறைவன் பால் மட்டுமே மனதை நிலைநிறுத்தி வணங்கினர். நமக்கு அப்படிப்பட்ட பக்தி வருவது கடினம்.
எனவே நாம் இறைவனை வணங்கும்போது, அப்பர் சுவாமிகள் அருளிய கீழ்க்கண்ட தேவாரப் பாடலை ஓதி வழிபட வேண்டும். இதனால் வழிபாட்டில் குறை இருந்தாலும் இறைவன் மன்னித்தருள்வார்.
இதோ அந்தப் பாடல்!
`பக்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ!
எத்தினாற் பக்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே!

Comments

Popular Posts