Sunday, June 7, 2015

வியாபாரத்தில் / தொழிலில் லாபம் அதிகரிக்க

வியாபாரத்தில் / தொழிலில் லாபம் அதிகரிக்க

இதை செவ்வாய் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் செய்து வரலாம். எவ்வளவு வாரங்கள் தொடர்கிறோமோ அவ்வளவு நன்மை வந்து சேரும்.
செவ்வாய் அன்று அதிகாலை ஆறு மணியளவில் குளித்து ஆஞ்சநேயர் படம்/விக்கிரகம் முன்பு சுந்தர காண்டம் புத்தகம் வைத்து அதற்கு சந்தனம் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு பின்பு 'ஓம் ஹம் அனுமதயே நமஹ்" மந்திரத்தை 108 முறை கூறி பின்பு நிவேதனம் செய்யவும். இந்நாளில் பால் பழம் மட்டும் உண்டு விரதம் அனுஷ்டிப்பது நன்மை சேர்க்கும். மாலையில் ஆறு மணியளவில் செம்பினால் ஆன சொம்பு ஒன்றில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இட்டு அதன் மேல் ஒரு தேங்காயை வைக்கவும்.சொம்பை சிகப்பு துணியினால் அலங்கரித்து அதன் மேல் பூக்கள் வைக்கவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 கூறி அனுமனை வழிபட்டு நிவேதனம் செய்து பூஜையை முடித்து விடலாம். மறு நாள் சொம்பில் உள்ள நீரை யாரும் கால் படாதவாறு ஏதேனும் மரத்தில் விட்டு விடலாம். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பூஜை முறை உடனடியாக தொழில்/வியாபாரம்/வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வை பெற்று தரும். செய்து பயன் அடையுங்கள்.
மந்திரம் : ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா ||

Friday, October 18, 2013

தன்னையே தானீந்தாலும் தீருமோ தாயின்கடன்

தாயென்னும் தவவடிவம் முற்றும் துறந்த முனிவர்களாலும் துறக்க முடியாததோர் உறவு. ஆதிசங்கரரைப் பற்றிப் பேசப்போந்த எழுத்தாளர் அமரர் தேவன், அவர் தன் தாயாரின் இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்து கண்ணீர் உகுப்பதை உருக்கமாக வர்ணிக்கிறார். முற்றும் துறந்த துறவியான அவர் ஏன் கண்ணீர் உகுக்கிறார் என அவர் சிஷ்யர்கள் அவரை வினவ அவர் காரணத்தை விளக்கி, முன்னதாக ஸ்ரீகிருஷ்ணரை தன் தாயாரிடம் சென்று ஆறுதல்படுத்தக் கேட்டுக் கொள்வதாகவும், அப்படியே சென்ற ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆர்யாம்பாள், “சங்கரா! வந்து விட்டாயா?” என வினவ, அவர் “சங்கரன் கேட்டுக் கொண்டதால் ஓடி வந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் நான்” என பதில் கூற “பகவானையே அனுப்பும் அளவுக்கு என் சங்கரன் அவ்வளவு பெரியவனாகி விட்டானா?” என வியப்பதாகவும் பின் சங்கரரே அங்கு வருவதாகவும் வர்ணிக்கிறார். துறவியான ஆதிசங்கரரால் கூடத் துறக்கமுடியாத பந்தம் தாய் என்னும் உறவு. ஊரே எதிர்த்தாலும், விறகுதர மறுத்தாலும், இவர் வீட்டின் புழக்கடையில் பச்சை வாழை மரத்தைத் தன் தவவலிமையால் கொழுந்து விட்டெரியச் செய்து தாயின் உடலை தகனம் செய்தார்.

மற்றொரு துறவியான ஸ்ரீபட்டினத்தாரோ தன் தாய் இறந்ததும் கதறிப் புலம்பி ஒரு பதிகமே இயற்றினார். கல்லையும் கரையச் செய்யும் அந்த வரிகளை நாமும் காண்போம்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!
எல்லாம் துறந்ததொரு பராபரத்தில் லயித்த துறவியான பட்டினத்தாரையே இவ்வாறு கதறியழச் செய்த உறவு தாயினுடையது. எத்துணை மேன்மையான உறவு அது! அந்தத் தாயின் தவத்திற்கு, தியாகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய கைம்மாறு எதுவாக இருக்க முடியும்? நம்மையே நாம் ஈந்தாலும் தீருமோ அந்தக் கடன்?

அஷ்டலக்ஷ்மி மாலா மஹா மந்த்ரம்:

அஷ்டலக்ஷ்மி மாலா மஹா மந்திரம்: 


ஓம் நமோ பகவதே, லோக வசீகர மோஹிநீ
ஓம் ஈம் ஐம் ஷீம்
ஸ்ரீ ஆதிலக்ஷ்மி ,ஸந்தானலக்ஷ்மி , கஜலக்ஷ்மி 
தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி விஜயலக்ஷ்மி 
வீரலக்ஷ்மி ஐஸ்வர்யலக்ஷ்மீதி 
அஷ்ட லக்ஷ்மீம் 
யோகதயா மம ஹிருதயே த்ருடயா ஸ்திதிதா 
ஸர்வலோக வசீகராய 
ஸர்வ ராஜ வசீகராய
ஸர்வ ஜன வசீகராய
ஸர்வ கார்ய சித்திதே, குரு குரு
ஸர்வாரிஷ்டம் ஜகி ஜகி
ஸர்வ சௌபாக்யம் குரு குரு 
ஓம் நமோ பகவதே ஸ்ரீ மகாலக்ஷ்மி 
ஹூம் பட் ஸ்வாஹா.

பகீரதப் பிரயத்தனம்

ஒரு அசாத்தியமான காரியத்தை, மிகுந்த பொறுமையோடும் தளராத விடாமுயற்சியோடும் செயல்படுத்தி வெற்றி காண்பதை 'பகீரதப் பிரயத்தினம்' என்று கூறுவது வழக்கம். இதற்கான காரணத்தை விளக்குவதுபோல் அமைந்த ஒரு கதை கீழே வர்ணிக்கப்படுகிறது.
முன்காலத்தில், பெரிய மன்னர்கள் எல்லாம் தங்களது புகழை நிலை நிறுத்தவும் பராக்ரமத்தை பறைசாற்றும் விதமாகவும் 'அஸ்வமேத யாகம்' செய்வது வழக்கம். சூரிய வம்சத்திலே வந்த 'சகரர்ஒ என்ற மன்னரும் அதுபோல் ஒரு மஹத்தான அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விதிப்படி மேற்கொள்ளப்பட்டது. யாகத்திற்குப் பூர்வாங்கமாக, த்ரிடதன்வா என்ற மஹாரதன் மேற்பார்வையில் மன்னரது குதிரை பல தேசங்கள் வழியாக வலம்வர அனுப்பப்பட்டது. ஆனால், ஒரு அமாவாசை இரவில் அரக்க உருவத்திலே வந்த இந்திரன் குதிரையைக் கவர்ந்து சென்றுவிட்டான். குதிரை காணாமல் போனதால் யாகத்தை நடத்த முடியாத நிலை ஏற்பாட்டது. துவங்கிய யாகமானது முடிவு பெறாமல் பாதியில் நின்றுவிடுமானால் அமங்கலம் ஏற்படும். ஆகவே குதிரையைத் தேடுவதற்காக தனது 60,000 புதல்வர்களையும் பணித்தார். உதயபர்வதம் முதல் அஸ்தமனகிரி வரையிலும் தேவலோகம், நாகலோகம், பிரம்ம லோகம், மற்றும் கருடனது மாளிகை வரை தேடுங்கள் ஒவ்வொருவரும் ஒரு யோஜனை தூரம் வீதம் அனைத்துப் பிரதேசங்களையும் விடாமல் தேடினால் வெற்றி நிச்சயம் என்று ஆசி கூறி அனுப்பிவிட்டு, சகர மன்னர் யாக தீஷையில் இருந்தார்.
தந்தையாரை வணங்கி உற்சாகத்துடன் புறப்பட்ட அவர்கள் வழியில் தென்படும் அனைவரையும் ஹிம்சித்துக்கொண்டே குதிரையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது தொல்லை பொறுக்கமாட்டாத தேவர்கள் எல்லாம் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். அவர்களது வேதனையை செவி மடுத்த பிரம்மதேவர், ஓபூமி தேவியை பகவானுடைய பத்தினியாக மதித்து மரியாதை செய்யப்பட வேண்டியவள் ஆதலால், பூமியை ஹிம்சை செய்யும் அந்தச் சகரப் புதல்வர்கள் கபில வாஸுதேவரின் கோபத்தால் அழியப்போகிறார்கள் கவலை வேண்டாம்' என்று சமாதானம் செய்தார்.
அனைத்து இடங்களிலேயும் விரிவாகத் தேடியும், குதிரை காணப்படாததால், சகர மைந்தர்கள், மன்னரிடம் தெரிவிக்க திருப்தியடையாத அவர் பூமியிலே காணவில்லையானால் பாதாளம் வரை தோண்டிச் சென்று கீழ் உலகம் அனைத்திலும் தேடி, குதிரையைக் கண்டுபிடியுங்கள் என்று வலியுறுத்திக் கூறவே, அந்த 60,000 புதல்வர்களும் கடப்பாரை, கலப்பைகள் சகிதமாக பூமியை எல்லா இடத்திலும் தோண்ட ஆரம்பித்தனர். பூமியைக் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் தாங்கி நிற்கும் விரூபாக்ஷன், மஹாபத்மன், சௌமனஸன் மற்றும் பத்ரன் போன்ற திக்கஜங்கள் அனைவரையும் வணங்கி வலம்வந்து, தொடர்ந்து தோண்டிக்கொண்டே வந்த அவர்கள் ரஸாதலத்தை அடைந்தனர். அங்கு தவம் செய்துகொண்டிருக்கும் மாமுனிவர் கபில வாஸுதேவரைக் கண்டனர். அருகிலே யாகக் குதிரை மேய்ந்துகொண்டிருந்தது. கோபத்தினால் நிதான புத்தி இழந்த அவர்கள், முனிவர்தான் குதிரையை அபகரித்து வந்துவிட்டார் என்று எண்ணி, அவரை ஆயுதங்களாலும் கற்களாலும் தாக்க ஆரம்பித்தனர். கோபம் அடைந்த கபில வாஸுதேவர் தன் உக்கிரமான பார்வையால் அவர்கள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கினார்.
ரொம்ப காலமாகியும் குதிரையைத் தேடிச் சென்ற 60,000 புத்திரர்களும் திரும்பி வராததால், கவலையடைந்த 'சகரர்' தனது பேரனான அம்சுமானை அழைத்து, சென்றவர்கள் கதி என்னவாயிற்று என்று தெரிந்து வரும்படி அனுப்பினார். ஆயுதங்கள் சகிதமாகப் பெரியவர்களை வணங்கி ஆசிபெற்றுப் புறப்பட்ட அம்சுமான், பல இடங்களிலும் தேடிக்கொண்டே வந்து திக் கஜங்களையும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார். ரஸாதலம் வந்தடைந்து எரிக்கப்பட்டு சாம்பல் குவியலாக இருக்கும் தன் முன்னோர்கள் கதியைப் பார்த்துத் துக்கம் மேலிட அழ ஆரம்பித்தார். அருகிலே யாகக் குதிரையும் காணப்பட்டது. இறந்தவர்களுக்கு ஈமக்கிரியைச் செய்யும் நோக்கத்தோடு, நீர்நிலைகள் இருக்கிறதா என்று நாற்புறமும் தேடியும் ஒன்றுமே காணப்படவில்லை. அதிக விசனமடைந்த அவர் முன் பறவைகளின் அரசனும் தன் முன்னோர்களின் தாய்மாமனுமான சுபர்ணன் வந்து சேர்ந்தார். கபிலவாஸு தேவரால் பஸ்மமாக்கப்பட்ட அவர்களைக் கரையேற்ற வேண்டுமானால், கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக; இந்தக் குதிரையைக் கூட்டிச் சென்று சகரர் துவங்கிய யாகத்தை பூர்த்தி செய்ய ஆவன செய்வாயாக என்று கூறினார்.
குதிரையை அழைத்துக்கொண்டு சகர மன்னரிடம் சென்ற அம்சுமான், நடந்த விவரங்களையெல்லாம் விவரமாக எடுத்துக் கூற, வேதனையடைந்த மன்னர், பெரியோர்களின் ஆலோசனைப்படி முதலில் தான் துவங்கிய அஸ்வமேத யாகத்தை நிறைவு செய்தார். 30,000 வருஷம் அரசாண்ட சகர மன்னர், கங்கையைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஆலோசித்து, ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவனை விட்டார். அம்சுமான் தனது புதல்வன் திலீபனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு, ஹிமயமலைச் சாரலில் 32,000 வருஷங்கள் தவம் செய்தும் கங்கையைக் கொண்டுவரும் விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் உயிர் நீத்தார். அடுத்து பட்டம் ஏற்ற திலீபனும் 32,000 வருஷங்கள் பலவித யாகங்கள் செய்தும், கங்கையைக் கொண்டுவரும் எண்ணம் வெற்றி பெறாமல் வியாதியால் பீடிக்கப்பட்டு முக்தியடைந்தார்.
திலீபனின் புதல்வரான பகீரதன், முன்னோர்களின் கதியை நினைத்து நினைத்து மனம் வருந்தினார். அவருக்குச் சந்ததியும் இல்லாததால் கவலை மேலும் அதிகமாகியது.
உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார். தவத்தினால் சந்தோஷமடைந்து, முன்னால் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்ட பிரம்மதேவரை, கண்களில் நீர் மல்க சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த பகீரதன், 'பிரபுவே! எனது வம்சம் விருத்தியடைய ஒரு புதல்வன் வேண்டும். மேலும், எனது முன்னோர்கள் முக்திபெற ஏதுவாக, ஆகாயத்திலிருக்கும் கங்கை நதி பூமியிலே பாய்ந்து வரவேண்டும்' என்று பிரார்த்தித்தான். பிரம்ம தேவர் 'பகீரதனே! அப்படியே ஆகட்டும். உனது குலம் விளங்க உத்தமமான ஒரு புதல்வன் தோன்றுவான். ஹிமவான் புதல்வியான இந்தக் கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது. அதன் மஹத்தான வேகத்தைத் தாங்கும் சக்தி சூலபாணியான சிவபெருமான் ஒருவருக்குத்தான் உண்டு; ஆகவே இந்தக் காரியத்தில் வெற்றிபெறச் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்வாயாக என்று ஆலோசனை கூறி, கங்கா தேவியிடமும் சொல்லிவிட்டு' சிருஷ்டிக் கடவுளான அவர், தன் இருப்பிடமான சத்யலோகம் சென்றார்.
கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றி, கைகள் இரண்டையும் தலைமேல் கூப்பி, இரவுபகலாக ஆகாரமின்றி வாயு யஷணம் செய்பவராய், அசையாமல் கட்டைபோல் நின்ற கோலத்தில், சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தார் பகீரதன். ஒரு வருஷம் கழிந்தது. தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் பகீரதன் முன் தோன்றினார். மலையரசன் மகளான கங்கையைத் தன் தலையிலே தாங்கிக்கொள்வ தாக வாக்களித்தார். அதை ஏற்ற கங்கா தேவியும் மஹத்தான சப்தத்தோடு, சிவ பெருமான் ஜடாமுடியில் பிரவேசம் செய்தாள்.
அதிவேகத்தோடு சிவபெருமானையும் சேர்த்துக்கொண்டு பாதாளம் அடைவேன் என்று கர்வம்கொண்ட கங்கா தேவியின் எண்ணத்தை அறிந்த மஹேஸ்வரன், தன் ஜடையிலிருந்து கங்கையைக் கீழே தரையில் விடவில்லை. சிவபெருமானின் ஜடாமண்டலத்தில் மோகம் அடைந்தவளான கங்கையும் கீழே இறங்க மனமின்றித் தலையிலேயே சுற்றிவரத் தொடங்கினாள். பல ஆண்டுகள் கழிந்தன. பகீரதன் பக்தியோடு மீண்டும் தீவிரமாகத் தவம் இயற்றினார். கருணாமூர்த்தியான சிவபெருமான், தலையிலிருந்து கங்கையை பூமியிலே, பிந்துசரஸ் என்ற இடத்தை நோக்கிப் பாயச் செய்தார். ஏழு கிளைகளாகப் பிரிந்த கங்கை நதியின், ஹ்லாதினீ, பாவனீ, நளினீ என்ற மூன்று கிளைகள் கிழக்கு நோக்கியும் சுஸக்ஷி ஸீதா, ஸிந்து என்ற மூன்று கிளைகள் மேற்கு நோக்கியும் ஏழாவது கிளை பகீரதனைப் பின்தொடர்ந்தும் செல்ல ஆரம்பித்தது.
பலதரப்பட்ட நீர்வாழ்ப் பிராணிகளோடு வேகமாக, பெரிய சப்தத்தோடு, பகீரதனைப் பின்தொடர்ந்து செல்லும் கங்கா நதியைக் கண்ட தேவர்கள், மஹரிஷிகள், கந்தர்வர்கள் மற்றும பூலோகவாசிகள் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தவர்களாக, ஆஹா! விஷ்ணுவின் பாதத்திலிருந்து உற்பத்தியாகி, சந்திர மண்டலத்தையெல்லாம் புனிதப்படுத்திவிட்டு, சிவபெருமான் மேனியிலிருந்து வரும் இந்தக் கங்கை நதி மிகவும் பவித்ரமானது என்று சொல்லிக்கொண்டே, தங்களது பாவங்கள் தீர்வதற்காக, அதில் நீராடியும், ஜலத்தைப் பாணம் செய்தும் மகிழ்ந்து தங்கள் இருப்பிடத்தை அடைந்தார்கள்.
பகீரதனது ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கா நதி, பாதையிலே அமைந்திருந்த 'ஜஹ்னுஒ மஹரிஷியின் ஆஸ்ரமத்தை மூழ்கடித்துவிட்டது. கோபம் அடைந்த மஹரிஷி, தனது தவ வலிமையால் ஆசமனம் செய்து கங்கையை முழுவதுமாகக் குடித்துவிட்டார்.
ஆக, மறுபடியும் சோதனை! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! மனம் தளராத பகீரதன் ஜஹ்னு மஹரிஷியிடம் கங்கையை விடுவித்து உதவ வேண்டும் என்று பணிவோடு பிரார்த்தனை செய்ய, அதே நேரத்தில் அங்கு வந்த தேவர்களும் மஹரிஷியே! இந்தக் கங்கை தங்களது புத்ரிக்கு ஒப்பானவள்; உலக நன்மையைக் கருதி, தாங்கள் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே, சந்தோஷமடைந்த ஜஹ்னு மஹரிஷியும் தன் காது வழியாகக் கங்கையை வெளியே அனுப்பினார். அதனால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்றும் பெயர் ஏற்பட்டது.
இப்படிப் பெரிய முயற்சியோடு கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் ஜலம், பகீரதனுடைய முன்னோர்களின் அஸ்தியின் மேல் பாய்ந்ததால் அவர்கள் அனைவரும் முக்தி அடைந்தார்கள். பிரம்மதேவரும், பகீரதனே! உலகிலே சமுத்திரங்கள் உள்ளவரை உனது முன்னோர் கள் சுவர்க்கலோகத்திலே நிலைபெற்று இருப்பார்கள். அதோடு இந்தக் கங்கை நதியும் உனது புதல்வியாகப் போற்றப்பட்டு, பாகீரதி என்ற பெயரையும் அடைவாள் என்று ஆசீர்வதித்தார்.
இந்த வரலாறுதனைக் கேட்கும் அனைவரும், சகல விதமான பாபங்களும் நீங்கப்பெற்று, நல்ல புதல்வர்களை அடைந்து, நீண்ட ஆயுள் பெற்று வாழ்வார்கள். பித்ருக்களும் திருப்தியடைந்து, நம்மை நல்வழி நடத்தி அருள் புரிவார்கள்.
இன்றுங்கூட, சிரார்த்த காலங்களிலே ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், பாலகாண்டம் சர்கம் 42, 43 & 44இல் வர்ணிக்கப்படும் இந்தக் கதையைப் பாராயணம் செய்வது வழக்கமாக உள்ளது.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி

மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார்.  அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை!  ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!

வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது.

சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது!  சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!

கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம். 

சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல  நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். 

இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

அதி சூட்சும ஷண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே

சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய 
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய 
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா! 
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

(இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது)

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.

அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான்.  ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

1923ம் ஆண்டு சுவாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை டாக்டர்கள் சுவாமி உயிர்பிழைக்க அக்காலை எடுத்துவிட வேண்டும் என்றார்கள். ஆனால், எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில், முருகப்பெருமான் காட்சிதந்து முறிந்த எலும்பு கூடுமாறு செய்தார். ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்
கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம்  ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர்.  பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.

சண்முக சடாக்ஷர மூல மந்திரம்

 
 

சண்முக சடாக்ஷர மூல மந்திரம்

 

ஓம் சரஅணபவ ,ஓம் சாயலொளிபவ, ஓம் திரிபுரபவ ,
ஓம் திகலொளிபவ, ஓம் பரிபுரபவ, ஓம் பகலொளிபவ ,
ஓம் சண்முகபவ, சுப்ரம்மண்ய ஆயசிவாக ஓம் .

குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்

குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி

ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி 
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி 
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி

ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி

ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி

Tuesday, September 24, 2013

காயத்ரி - ஸ்ரீ் பெரியநாச்சியம்மன், ஸ்ரீ் ஆண்டாள், ஸ்ரீ் கற்பகாம்பாள், ஸ்ரீ் அர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீ் சங்கர நாராயணா

ஓம் நமசிவாய, ஓம் சக்தி, ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ் பெரியநாச்சியம்மன்   காயத்ரி
ஓம் மஹா சக்த்யை ச தீப்பாஞ்சாய வித்மஹே
    சக்தி ஸ்வரூபின்யை தீமஹி
    தன்னோ பெரியநாச்சி ப்ரசோதயாத்!


ஸ்ரீ் ஆண்டாள்   காயத்ரி
ஓம் துளசி தோட்ட ஜனன்யை ச விஷ்ணு ப்ரிய வித்மஹே
    ஸ்ரீ் ரெங்கனொன்றினாய தீமஹி
    தன்னோ கோதை ப்ரசோதயாத்!

ஸ்ரீ் கற்பகாம்பாள்   காயத்ரி
ஓம் மயிலாய் அர்ச்சித்தாய வித்மஹே
    கபாலீஸ்வரம் அமர்ந்தாய தீமஹி
    தன்னோ கற்பகாம்பிகா ப்ரசோதயாத்!


ஸ்ரீ்  அர்த்த நாரீஸ்வரர் காயத்ரி
ஓம் தபஸ்ய ச வாம பாகமாய வித்மஹே
    சிவசக்த்யாய தீமஹி
    தன்னோ அர்த்த நாரீஸ்வரா ப்ரசோதயாத்!


ஸ்ரீ்  சங்கர நாராயணர் காயத்ரி
ஓம் சிவா-விஷ்ணு ச ஏக ரூபமாய வித்மஹே
    தபஸ் சக்த்யாய தீமஹி
    தன்னோ சங்கர நாராயண ப்ரசோதயாத்!


2013 - சித்ரா பௌர்ணமி அன்று இந்த காயத்ரி மந்திரங்கள் - இணைய தளத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

இந்த காயத்ரி மந்திரங்கள் உலக மக்களின் நலனுக்காக வெளியிடப் பட்டுள்ளது.

இம்மந்திரங்களை தினமும் 108 முறை ஜெபித்து எல்லா வளமும்,  நலனும்  பெற  
சென்னை மயிலாப்பூரில் வீற்றிருக்கும் 
ஸ்ரீ் கற்பகாம்பாள் உடனாய ஸ்ரீ் கபாலீஸ்வரர் அருள் புரிவாராக ...