சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்
மேலே கூறப்பட்டுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.
ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.இதைத் தவிர,வேறு பல வழிமுறைகள் உங்களுக்கோ,உங்களின் ஜோதிட குருநாதருக்கோ,ஆன்மீக வழிகாட்டிகளுக்கோ,உங்களின் பகுதி பிராமணர்களுக்கோ தெரிந்திருக்கும்.அவற்றில் உங்களால் முடிந்தவற்றை பின்பற்றவும்.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்
ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்
ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ
சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்
ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3
ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!
Ayah, entha manthiraththai muthalil solla ventum? konjam varisai patuthi solla mutiuma please?
ReplyDelete