பலன் தரும் ஸ்லோகம்
அறிவுக் கூர்மையை வளர்க்க, சமயோசிதமாக நடந்துகொள்ள...
ஆதிசக்தே ஜகன்மாதா பக்தானுக்ரஹ
காரிணி
ஸர்வத்ர வ்யாபிகேநந்தே ஸ்ரீ ஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ ஸாவித்ரீ ச
சரஸ்வதி
ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்தஸ்வேதா ஸிதேதரா
&காயத்ரீ ஸ்தோத்திரம்
பொதுப் பொருள்: ஆதிசக்தியே, உலகமனைத்திற்கும் தாயே நமஸ்காரம். பக்தர்களைக் காத்து அவர்களுக்கு நற்பலன்களை அருளும் அன்னையே, எங்கும் நிறைந்திருப்பவளே, நமஸ்காரம். முடிவு காண இயலாத ஸந்தியா தேவியே, நமஸ்காரம். காயத்ரி தேவியே, உன்னை விஷ்ணுவின் சக்தியான ஸந்தியாவாகவும், ஈசனின் சக்தியான ஸாவித்ரியாகவும், பிரம்மாவின் சக்தியான ஸரஸ்வதியாகவும், ரக்தச்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் நான் காணுமாறு பிரகாசிக்கும் ஜகன்மாதாவே நமஸ்காரம்.
(காயத்ரி ஜபம் தினத்தன்று (14.8.11) இத்
துதியை பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் அறிவு பிரகாசிக்கும்; சாமர்த்தியமாகப் பேசும், செயலாற்றும் வல்லமையைப் பெறலாம்.)
Comments
Post a Comment