குரு தியான ஸ்லோகம்
அகத்தினிலே குடிகொண்ட அஞ்ஞான இருளை
அகற்றிவிடும் ஞாயிற்றின் நல்லுதயத் தீவாய்
செகத்தினிலே அறிவிலியாய் இருக்கின்ற பேர்க்கு
தீந்தேனாம் ஞானமென்னும் கற்பகத்தருவாய்...
மிககொடிய நோய்வறுமை பீடித்தோர்க்கு, செல்வம்
வேண்டியதைக் கொடுக்கின்ற நற்சிந்தா மணியாய்
இகக்கடலில் மூழ்கியோர்க்கு வராகரின்கோ ரையாய்
இருப்பதுநின் திருப்பாத தூளிதானே அம்மா!
-வியாழக் கிழமைகளில் பூஜை அறையில் விளக்கேற்றி, குருவுக்குரிய தியான ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.
Comments
Post a Comment