FKart PrmotionalBanners

முருகன் துதிப்பாடல்

முத்தைத்தரு பத்தித் திருகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபா எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பதுமு வர்க்கத் தமரரு மடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதோடு
ஒன்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரக்ஷத் தருள்வது மொருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துக் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடக்
திக்குப்பரி யட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்தரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமானே
-அருணகிரிநாதர்

Comments

Popular Posts