நரஸிம்மர் ஸ்லோகம்
அரே! க்வாஸௌ க்வாஸௌ
ஸகலஜகதாத்மா ஹரிரீதி
ப்ரபந்நே ஸ்ம ஸ்தம்பம்
சலிதகரவாளோ திதிஸுத:
அத: பச்சாத்விஷ்ணோ ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வார்த்மன்!
பவனபுரவாஸின் ம்ருடய மாம் //
விளக்கம்::
ஸகல உலகத்திற்கும் அதிபதியான உன் ஹரி எங்கு இருக்கிறான் என்று வினவ தூணை பிளந்து நரசிங்கமாய் அவதாரம் செய்த பெருமாள் ஹிரண்யகசிபுவை வதம் செய்த காட்சியை கண் முன்னே .நிறுத்த என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று குருவாயூரப்பன் சன்னதியில் அவனை வேண்டி நின்றார். பட்டத்ரி நம்மையும் அவரோடு அழைத்து குருவாயூரப்பன் முன்னே நிறுத்தி அவன் அருளையும் நரஸிம்மர் அருளையும் பெற நம்மை அழைக்கிறார். அப்பேற்ப்பட்ட குருவாயூரப்பன் நம்மையும் காக்கட்டும்.
Comments
Post a Comment