FKart PrmotionalBanners

கனகதாரா மந்திரம்

கனகதாரா மந்திரம்
மொட்டுக்கள் மலர்ந்து அணி செய்யும் தமால மரத்தைப்
பொன் வண்டு மொய்த்திருப்பதைப் போல,
திருமாலின் திருமேனியைச் சேர்ந்திருக்கின்ற,
எல்லா வகைச் செல்வங்களும் தலைவியானவளும்
மங்களத் தெய்வமும் ஆக மகாலட்சுமியின்
கடைக்கண் பார்வை எளியேனுக்கு மங்களத்தை அளிக்கட்டும்.
நீலோத்பல மலரொன்றில் வண்டொன்று சென்று
மொய்ப்பதும் பறப்பதும் மீண்டும் வருவதும் போல,
காவிஷ்ணுவின் திருமுகத்தைக் காதலால்
நோக்குவதும் `நாணத்தால்' அகல்வதும் மீண்டும்
அன்புடன் பார்ப்பதுமான மலர்ந்த முகத் தினளும் பாற்கடலில் உதித்தவளுமான திருமகளின் திருநோக்கு
அடியேனுக்குச் செல்வத்தை அளிக்கப்படும்.
இந்திரப் பதவி, அரசயோகம் இவற்றை இந்த உலகிலேயே
தம் அடியார்க்கு விளையாட்டாகக் கொடுக்கக் கூடியதும்,
முரனை அழித்த திருமாலிற்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பதும்
நீலோத்பல மலரின் உட்புறம் போன்றதுமான திருமகளின்
கடைக் கண் பார்வை ஒரு கணம் என்மீது விழட்டும்.
இன்ப மேலீட்டால் இமை மூடியிருக்கும் முகுந்தனிடம்
காதல் வயப்பட்டு அவனை இமைகொட்டாமல் நோக்கு கின்றதும், ஆனந்தத்திற்கு இருப்பிடமானதும்,
கொஞ்சம் புரட்டப்பட்ட நீலவிழி,
இமை இவைகளை உடையதுமான திருமகளின்
திருக்கண் எளியேனுக்கு எல்லா நலன்களையும் அளிக்கட்டும்!
எந்தக் கடைக்கண் பார்வை, மது என்ற
அரக்கனை அழித்த ஹரியின் திருமார்பில்
விளக்கும் கௌஸ்துப மணிபோல் பிரகாசிக்கிறதோ,
அந்த ஹரிக்கே பெரிய செல்வத்தை வழங்குகின்றதோ!
திருமகளின் அந்தக் கடைக் கண்
பார்வை எனக்கு மங்களத்தை நல்கட்டும்!
கரியமேகம் போல் அழகிய திருமாலின் திருமார்பில்
மின்னற்கொடி போன்ற ஒளியுடன் திகழ்பவளும் எல்லா
உலகங்களுக்கும் அன்னையானவளும் பார்க்கவ மகரிஷியின் திருமகளுமான மகாலட்சுமி எளியேனுக்கு மங்களத்தை அருளட்டும்! திருமகளின் கண்களென்னும் கருணை பொழியும் மேகம்,
வறுமையால் வாடும் இந்த ஏழையான பறவையின்
மீது பொழியட்டும் அந்தப் பொன்மழை தீவினை
வெப்பத்தைப் போக்கி அருளட்டும்!
தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே!
தாமரையைக் கையில் தாங்கியவளே!
வெண்ணிறப் பட்டாடை, சந்தனம், மாலை இவற்றில்
பிரகாசிப்பவளே! பெருமை வாய்ந்தவளே!
திருமாலின் திருவே! அனைவர் மனத்தையும் அறி பவளே!
மூவுலகங்களுக்கும் செல் வங்களை வாரி வழங்குபவளே
எளியேனுக்கும் கருணை செய்வாய்!
தாயே, உனது கடைக்கண், பார்வையைத் தியானம் செய்வதால்,
ஒருவன் எல்லாச் செல்வங்களையும் பெறுகிறான்.
அத்தகைய உன்னை, முராரியின் இதய நாயகியை மனம்,
மொழி, மெய்யால், வழிபடுகிறேன்!
தங்கக் குடங்களில் நிரப்பப்பட்ட நிர்மலமான பரிசுத்தமான
தேவகங்கை நீரால் திசையானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு,
அதனால் நனைந்த தூய திருமேனியை உடையவளும்,
உங்களுக்கெல்லாம் அன்னையும்,
உலக நாயகனான திருமாலின் மனைவியும்,
திருப்பாற்கடலின் மகளாகவும் விளங்கும் மகாலட்சுமியை வைகறைப் பொழுதில் வணங்குகிறேன்!
தாமரை மலரில் வாழ்பவளே!
தாமரை போன்ற கண்களையுடைய திருமாலின் தேவியே!
கருணை அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால்,
ஏழ்மையில் முதலிடம் பெற்றவனும் உனது அருள் வேண்டுபவனும்
ஆன எளியேனைப் பார்த்தருள்வாய்!
பலன்கள்:
வீட்டில் கனகதாரா பூஜை செய்தால் அவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். கனகதாராவின் முக்கிய அம்சமே தன்னை வழிபடுவோருக்கு அனைத்து வித செல்வங்களையும் வாரி வழங்குவது தான். எனவே கனகதாராவை வழிபட்டால் அவர்களது வீட்டிற்கு தேவையான பொன் பொருளை அள்ளித் தருவார்.
கனகதாராவை கிழக்கு முகமாக வைத்து பூஜை செய்பவர்கள் அன்று இரவு கனகதாரா படத்தை மேற்கு முகமாக வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது வீட்டில் அன்னலட்சுமி எந்நேரமும் வீற்றிருந்து அருள் மழை பொழிவார் என்பது விசேஷம்!
48 நாள் கனகதாரா பூஜை செய்தால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லைகள் உடனடியாக நீங்கும். செல்வம் பெருகும். அஷ்டலட்சுமிகளின் கடாட்சம் கிடைக்கும் என்கிறார் ரெங்கராஜன்.

Comments

Popular Posts