FKart PrmotionalBanners

பிறந்த நாள் பலன்

சூரியன் -1

நீங்கள் 1,10,19,28 தேதிகளி;ல் பிறந்திருந்தால் உங்கள் எண்ணில் நாயகராக சூரியன் வருவார். உங்களை நாடிவருபவர்களை ஆதரிக்க கூடியவர் நீங்கள் தலைமை தாங்கும் எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். கலைரசனையும், துல்லிதமான அறிவும். பிறருக்கு போதிக்க கூடிய தன்மையும் கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும். பத்திரிக்கை தொடர்புடைய தொழில்களும், அரசியல், அரசியலை நிர்வகித்து நடத்தி செல்லகூடிய ஆற்றலும், உருவாகும். நீங்கள் எவருடன் இணைந்தாலும் உங்களின் தனித்தன்மையை இழக்கமாட்டீர்கள். எண்களிலேயே இது ராஐh,நீங்கள் விரும்பாவிட்டாலும் தலைமை பொறுப்பு உங்களை தேடிவரும். பொறுப்புகளை ஏற்றபின் அந்த பதவிக்கு வலிமையை சேர்;ப்பீர்கள். சில வேலைகளில் மற்றவர்களுடைய குறைகளை பலர்முன்பு கேட்டுவருவீர்கள். இதனால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகி விடும். அத்துடன் தங்களிடம் பிடிவாதங்கள் நிறைந்து காணப்படும். படிபடிப்பாக குறைந்துக் கொள்வது உங்;கள் வளர்ச்சியில் மேலும் மெருகேற்றும். உங்களுக்கு ஏற்படும் நோய்கள். சோர்வு, அதிகதூக்கம். மலச்சிக்கல், கண்நோய்கள், அஜீரணம், இருதயபலகீனம். வயிற்று பச்சிகள் நிவர்த்திக்குரியவைகள் பகல் தூக்கம். கூடாது. இரவு விழித்தல் கூடாது. எண்ணைக்குளியல் அவசியம். பழைய உணவு கூடாது நோய்நிவர்த்தி செய்து அதிர்ஷ்டத்தை தேடி தரும். நவரத்தினம் - மாணிக்கம் (Ruby) உபரெத்தினம் - சன்ஸ்டோன், (Sun Stone) டோபாஸ், (Topax) ப்ளட்ஸ்டோன் (Blood Stone) அதிர்ஷ்ட எண் - 1.4.கூட்டு எண்கள் அதிர்ஷ்ட நிறம் - வெளீர் சிவப்பு, சந்தனம், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை அதிர்ஷ்ட ரத்தினக்கல் - கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன் அதிர்ஷ்ட திசை - கிழக்கு அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு வணங்க வேண்டிய தெய்வம் - சிவன்

சந்திரன் - 2

நீங்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்திருந்தால் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வருகிற ஒற்றை எண்ணாக 2 எண் வந்தாலும், உங்கள் எண்ணின்; நாயகராக சந்திரன் ஆவார். இந்த எண் மனதை ஆளும் தன்மையுடையது உங்கள் கற்பனை உலகத்தின் முதன்மையான நபர் என்று குறிப்பிடலாம். இந்த எண் வலிமை குன்றினால்- திருட்டு,மற்றும் மோசமான செயல்கள் தொடர்பான சிந்தனைகளை அதிகப்படுத்தும் வலிமையாக இருந்தால் நுண்ணிறிவுடன் உங்களை வளப்படுத்தி வாழ வைக்கும், கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். ஆலோசனையே சிலருக்கு தொழிலாக மாறிவிடும்.முன் கூட்டியே உணரும் அதீத சக்தியும், உண்டாகும். பஞ்சப+த தத்துவத்தில் நீர் தன்மையை இந்த குறிப்பதால் எளிமையான வழிகளையே தேர்வு செய்வீர்கள். அன்பு உங்களிடம் மேலோங்கி இருக்கும். எண்ணங்கள், நீர்வீழ்ச்சி போன்று கொட்டிய வண்ணம் இருக்கும். உங்களிடம் மேலோங்கி எண்ணங்கள் நீர்வீழ்ச்சி போன்று கொட்டிய வண்ணம் இருக்கும் உங்களிடம் இருக்கும் ஒரே குறை. சந்தேகம், சந்தேகம்தான், குறைத்து கொள்க. உங்கள் செயல் இன்னும் வேகப்படும்,போற்றப்படுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் நோய்கள் ரத்தகுறைவு, ஐலதோஷம், தலையில் நீர்கோர்த்தல், நூரையீரல் நோய், நீரழிவு, புண்களில் நீர்வடிதல், மூட்டுவலி, போன்றவைகள், கவலை, மனநோய். நிவர்த்திகுரியவைகள். தனிமை கூடாது. தனித்து இல்லாமல் மற்றவர்களுட.ன் கூடிஇருத்தல்-எல்லாவற்றை இறைவன் மீது பாரத்தை போட்டு மனதளர்ச்சியுடன் செயல்படுதல் பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்க.நோய் என்பது மனதை குறித்த தொடர்புடையதாகவே இருக்கும். அலர்சி சம்பந்தமாக வருமானால் மனம் இறுக்கம் உண்டு என்பதை அறித்துக் கொள்ளவும் உங்களுரிய நோயையும் பிரச்சனையும் போக்க கூடிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - முத்து, சந்திரகாந்த கல்.(Moon Stone) உபலகம் (opel) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 2ன் வரிசை, 7ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சந்தனகலர் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - வடமேற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை - திங்கள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட வணங்க வேண்டிய தெய்வம் - பார்வதி
.

குரு- 3

நீங்கள் 3,12,21,30 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகன், வியாழன் வருவார். பிறருக்கு வழிகாட்டிடும் போதகர், முனிவர், தர்ம கர்த்தர். மந்திரி, நல் ஆசிரியர் போன்ற நல் உள்ளம்,படைத்தவர் நீங்கள், கௌரவமான வாழ்க்கை அமையும்.பொது காரியங்களின் உங்களை ஈடுபடுத்தி மற்றவர்களுக்கு வழிக்காட்டுவீர்கள். சமாதானப்பிரியர், பெரியோர்களிடம் பணிவும், கீழ்நிலையுள்ளவர்களிடம் அன்பு காட்டுவீர்கள்.தீர்க்கமான சொல் உங்களுடையதாக இருக்கும். பொது ஸ்தாபானங்கள் உங்களால் பெருமையடையும், புதிய விஷயங்களை உலகுக்கு சொல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் தான் அதிகம் இருக்கும். வாதிடும் திறமை அதிகம் உள்ளவர்கள் நீங்கள். பிறருக்கு மனமிறங்கி செயல்படுபவர்கள். மருத்துவர்களாகவும் சேவை மையம் நடத்துபவர்களாகவும், சமுக நோக்குடன் அரசியலிலும். ஈடுபடுவீர்கள். பிரயாணகளில் வளர்பதிலும் ஆர்வமிருக்கும். எண்ணில் பலம் குறையும் போது பிறர் அறியாவண்ணம் - சண்டை மூட்ழ விடுவீர்கள்.உங்களின் குறைபாடு குடும்பத்திலுள்ளவர்களை கவனிக்காமல் வெளியுலகத்தை பார்;ப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் வயிற்று உபாதைகள். தீராத தலைவலி, எரிச்சலுடன் கூடிய நோய், வாதநோய், மன உளைச்சல், தொண்டை, நாக்கு, காது, தொடர்பான நோய்கள், நிவர்த்திற்குரிய வழிகள் அதிக பொறுப்புகளை ஏற்று கொள்ளாதீர்கள்,சாப்பிடும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் முறைப்படுத்துங்கள் முரண்பாடு உடையவர்களுடன், விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும், நோய் நிவர்த்தியும். பிரச்சனைகளால் ஏற்படும் குழப்பங்களையும் போக்கி அதிர்ஷ்டத்ததை அள்ளி தரும் ரத்தினகற்கள் - கனகபுஸ்பராகம், அமிதிஸ்;ட், டோபாஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 3ன் வரிசை, 9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - தங்கநிறம். ரோஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை -வட கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - தெட்சணாமூர்த்தி

ராகு - 4

நீங்கள் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகராக ராகு வருவார். எல்லாம் தெரிந்தவர் நீங்கள். பணம் பண்ணுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டவர் நீங்கள். அதனால் மற்ற விசயங்களில் ஈடுபாடு கொள்ள மாட்டீர்கள். வசதி வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதில் சமர்த்தர். உங்கள் எண்ணங்கள் யாவும் சித்தியாகும். ஓருவரை வாழ வைக்கவும். வீழச்செய்யவும். உங்களால் முடியும். இவ்வளவு திறமையுள்ள உங்களுக்கு ஒரு வித மனக்குறை இருந்துக் கொண்டே ஏக்கம் கொள்ள வைக்கும். வித விதமான நவீனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். கடினமான சூழ்நிலையிலும், மனதை தளரவிடாமல், காரியம் ஆற்றி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தான் குடியிருக்கும், வீட்டை, தெருவை பகுதியை, நாட்டையை கூடி சீர்படுத்தும் ஓர் சீர்திருத்தவாதி, புதிய சிந்தனைகளால் தூண்டப்பட்டு மற்றவருக்கு வழிகாட்டுவீர்கள். நவீனப்தொழிலகள் நாகரீக தொழில்கள் உங்களுக்கு ஏற்றவை கலைதுறையில் தொழில்நுட்ப பிரிவு உங்களுக்காக காத்திருக்கும், எலக்ட்ரானிக்கல் ஆய்வு கூடங்கள் போன்றவைகளும். உங்களுக்கு தான. இந்த எண்ணீர் பலம் குறைவு ஏற்படின் உடலில் நோயையும் பிறருடன் இணக்கம் கொள்வதில் குறைப்பாடும் காணப்படு;ம் தோல் சம்பந்தமான நோய்களும், நரம்பு தொடர்பனான பாதிப்புகளும், வயிற்றுபுண், குழல்வாழ்வு, பாலியல் நோய்கள் அவதியுற நேரும். நிவர்த்திக்குரிய வழிகள். பெற்றோர்கள், பெரியவர்கள் மனம் புண்படாமல் நடந்துக் கொள்ளுங்கள். தான தருமங்கள் அதிகமாக செய்யுங்கள். நோய் நிவர்த்தியும் புரஉபகார சிந்தனையும் மேலோங்கி அனைத்து வெற்றிகளையும் அளித்திடும். அதிர்ஷ்ட ரெத்தின கல்- கோமேதகம், கார்னட் (Garnet) ஸ்பின்னல் (Spinel) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 28,31,1,10,19,27.40 உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - மெருன்,லைட்புளு உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- ஞாயிறு உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் -துர்க்கை,பத்ரிகாளி

புதன் - 5

நீங்கள் 5,14,23. ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகன் புதன் ஆவார் தங்கள் பேச்சு திட்டமிடுதலும் வேகமுடையதாக இருக்கும் வளர்ந்தும் மாறியும் வரும் உலகத்திற்கு காரண கர்த்தா யார் தெரியுமா? நீங்கள் தான் நவீனத்தை நோக்கி சிந்திப்பதிலும், மற்றவரை வழிநடத்தி செல்வதும், நீங்கள் தான் வேகத்தையும், விவேகத்தையும், செலுத்தும் நீங்கள், செய்யும் காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளும், தவறுக்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று குறை கூறிவிடுவீர்கள். உங்களிடமும் குறைகள் உள்ளது என்பதை மறந்து விடுவீர்கள். வியாபார துறைகளில் புதிய நுணுக்கத்தை புகுத்தி வெற்றி காண்பீர்கள். நீங்கள் ஒரு சமாதான ப்ரியர். வீதியி;ல் சண்டைப் போட்டு கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சென்று சமாதானம் செய்வீர்கள். உங்கள் பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும், யாராய் இருந்தாலும் கட்டுபட்டு அமைதி அடைவார்கள். நவின கண்டுபிடிப்புகள்,மனோதத்துவம், அதீத அறிவு சார்ந்த துறைகளிலும் மருத்துவ துறைகளிலும், எலக்ட்ரானிக் துறைகளிலும், பெயர் படைக்கும் அளவிற்கு வெற்றியாளர் நீங்கள் எதையும், எளிமையாக சாதிக்கும் உங்களுக்கு இந்த எண்ணீன் பலம் குறையுமானால், உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் தூக்கமின்மை, பயங்கர குழப்பம், நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள் நோய் நிவர்த்திற்குரிய வழிகள். அதிகமான விசயங்களை பற்றி குழப்பிக் கொள்ளாமல் ஒன்றை வலிமையாக சிந்தித்து பின் மற்றொரு விசயத்திற்கு செல்லுதல் நலம்.நேரம் கழித்து உண்பது கூடாது. அசைவ உணவுகளை குறைத்து சாப்பிடவும். உங்களுடைய குழப்பமான பிரச்சனைகளையும், நோய் வரும் முன் காத்திடவும் உங்களுக்கு அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்- மரகதம், அனக்ஸ்,பச்சைநிற ஓபல் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 5.9,ன் வரிசைகள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - வெளீர் பச்சை, சாம்பல் நிறம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - வடக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- புதன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - மகாவிஷ்ணு

சுக்கிரன் - 6

நீங்கள் 6,15,24 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகர் சுக்கிரன் ஆவார். எதிலும் ஓர் அழகு, அற்புதம், இன்ப அதிர்ச்சி, என்ற நிலையில், உங்கள் மணம் செயல்படும். வாழ்க்கையும். அதுப்போல் இன்பமாய் அமையும் யோக நிலையில் உள்ளவரை பார்த்து அவருக்கு சுக்ர தசை அடிக்குது என்பார்கள், அந்த பாக்கியவான்கள் நீங்கள் தான், மணவாழ்க்கையும், உங்கள் மனம் போல் அமையும், வீடு வாகனம், அதுவும் திருப்தி தரும். துறவறத்திலும் இன்பத்தை முதலில் அடைபவர்கள் இந்த எண்காரர்கள் தான். ரசிக்க தெரிந்தவர். கலைக்காக உங்களை அர்ப்பணம் செய்வீர்கள். இனிமையாக பேசுவீர்கள். ஞாபகசக்தியும். தன்னம்பிக்கையும், உடையவர். புகழுக்காக செலவழிப்பீர்கள் உயர்ந்த நிலையுள்ளவர்களின் நட்பும் தொடர்பையும் மட்டுமே விரும்புவீர்கள். உங்கள் பெயர் சரியாக அமைந்து விட்டாள் நீங்கள் வசிக்கும் பகுதியில் பெரிய செல்வந்தர் நீங்கள் தான் ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும். பெருத்த உதவிகள் கிட்டும். வாழ்க்கை துணை தன்னை விட வசதியான இடத்தி;ல் அமைத்து கொள்ளுங்கள் வெற்றி எளிமையாக அடையக் கூடிய நீங்கள் எண்ணீன் பல குறைவு (or) பெயரின் எண் பொருத்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையில் போய்விடும். உங்கள் எண்ணீன் பல குறைவால் ஏற்படும் நோய் கண். மூக்கு, முகத்தில் தழும்புகள். நரம்பு பலகீனம், மறைமுக ஸ்தாபன நோய்கள்,தொண்டபுண்,நுரையீரல் நோய் போன்றவைகள் காணப்படும். நோய் நிவர்த்திக்கான வழிகள், அளவான குடும்ப உறவு குளிர்ந்த நீரில் கண்களை கழுவுதல், ஆசைகளை அதிகம் வளர்த்து கொள்ளாமை- உங்களுடைய தோல்வி நிலையை போக்கிடவும், நோயினால் துன்பமடைவதை தவிர்க்கவும். உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - வைரம். ஜிர்கான், பெரிடாட் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 6ன் வரிசை, 4,9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - ரோஸ்.மஞ்சள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - தெ.கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வெள்ளி உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - மகாலெட்சுமி

கேது - 7

நீங்கள் 7,16,25 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் கேது ஆவார். தெய்வ நம்பிக்கையி;ல்,தெய்வ அணுகிரகம் கிடைப்பதிலும், முதல் மனிதர்கள் நீங்கள். எதுவாய் இருந்தாலும், தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு கடமையை செய்யும் கண்ணியமானவர், வாழ்க்கை சுகம் போகங்கள் கிடைத்தாலும். எளிமையாக காட்சி தருவீர்கள். மற்றவர்களை கண்டு பொறாமை படமாட்டீர்கள். புரட்சிகர கருத்துக்களையும். வெளியீடுவீர்கள். சோதிட, மருத்துவர், தத்துவ ஆராய்ச்சியி;ல் ஈடுபாடு இருக்கும். மூடத்தனமாக எதையும் கடைப்பிடிக்கமாட்டீர்கள். பிடிவாத குணமும் இருக்கும், கணவன், மனைவியுடன், ஒத்துழைப்பு குறைவாக காணப்படும். கணவன், மனைவிடம் முரண்பாடுகளை குறைத்துக் கொள்வது நலம் பயக்கும். நண்பர்கள் குறைவு, ஆனாலும் நல்ல நண்பர்களை பெற்று இருப்பீர்கள். நீண்ட தூர பிரயாணங்கள் சாஸ்திர ஆராய்ச்சிகள் வெற்றி தரும். கடவுளை பற்றி அதிகம் பேசுவீர்கள். கோயிலுக்கு செல்லமாட்டீர்கள். தத்துவ ஞானம் மேலோங்கும். மருத்துவ சார்ந்த தொழில்,புகைப்படத்தொழில், பொருளாசைபடாமல் சேவை தொழில்களில் ஈடுபாடு அதிகம் காணப்படும். இந்த எண்ணீல் பலம் குறைந்தால், மோசடி வேலைகளில் ஈடுபடுதல், தீவிரவாதத்தில் நம்பிக்கை, உலகத்தை மாற்றிவிடுகிறேன் என்று சபதம் மேற்க் கொண்டு பைத்தியம் போல் அலைதல். உங்கள் எண்ணீன் பல குறைவால் ஏற்படும் நோய் மூலம் நோயும் ரத்த மூலம்,தோல் வியாதிகள், வயிற்று உபாதை,மூளை குழப்பம், தலைநோய், பிடிவாதங்கள் நீங்கி நோய் நீங்கவும், வாழ்க்கை வளம் பெற உதவும் உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - வைடூரியம், டைகர்ஐ (Tiger Eye) கருப்பு நிற ஓபல் (Black open) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் - 2ன், 7ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - பலநிறம், பாசபச்சை உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - வடமேற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகர்

சனி - 8

நீங்கள் 8,17,26 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் சனி ஆவார் கடமை, உணர்;ச்சியும், பொறுப்பும். மிகுதியுடைய நீங்கள், போராட்ட உணர்வும், இடைய+ர்களையும், கொடுத்து பின் வெற்றியை குறிக்கும். இந்த எண் நிதானமாக செயல்படுங்கள்.அவசரமாக செயல்பட்டால் தோல்வியை காண்பீர்கள். கிரங்களில் வலிமையான கிரகம் சனிபகவான் ஆவார். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதற்கு ஏற்ப சோகங்களையும், சோதனைகளையும், கொடுத்த பின்பே சுகங்களை தரும். உங்கள் பாணியே தனி மறைமுக எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள்.ரகசிய தொழில்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவரின் நலனுக்கு தன்னையே அர்ப்பணிப்பவர் நீங்கள். பெரிய நிறுவனங்களில் பொறுப்புகள் சுமையாக மாறும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் போது தொழிலி;ல் பிரச்சனையும். தொழிலி;ல் நிம்மதி என்கிற போது குடும்பத்தில் பிரச்சனையும் உண்டாகும் இது விதி. இவ்விதியை விதிக்குள்ளிருக்கு வித்தையை அறிந்து செயல்பட்டால் நீங்களும் பெரிய வெற்றியாளர்தான். உங்கள் பெயரை சரியாக அமைத்து செய்தொழில், வியாபாரம், பதவிகளில் பெயரும் புகழும் பெற்றிருங்கள். எண்ணீன் பலம். அதிகரித்தால் அது பலவீனமாகும். நோய் நுண்ணிய நரம்பு பாதிப்பு, வாதம், கபம்,ஆஸ்துமா, எலும்பு உடைதல். போன்ற நோயின் தாக்குதலை தவிர்க்கவும். மன வேதனையிலிருந்து நீங்கி வளம் பெறவும். உங்களுடைய அதிர்ஷ்ட ரெத்திக கற்கள் - நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ் உங்களுடைய அதிர்ஷ்ட எண் - 5ன் வரிசை உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - நீலம். வைலட் உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு உங்களுடைய அதிர்ஷ்ட கிழமை - சனி,ஞாயிறு உங்களுடைய வணங்க வேண்டிய தெய்வம் - காவல் தெய்வம்

செவ்வாய் - 9

நீங்கள் 9,18,27 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் செவ்வாய் ஆவார் வீரம், விவேகம், அதிகம் காணப்படும் எண் இது. பொறுமை எப்படி இருக்கும் எனக் கேட்பவர் நீங்கள். செயலில் வேகம், உறுதி போர்குணம் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற போக்கு உங்களின் சிறப்பு பிறரிடம் காரியங்களை சாதித்து கொள்ள மென்மையாக அணுக மாட்டீர்கள். அதிகார தோரணையில் கேட்பீர்கள். முரடர், பெரியஆள். சரியான மனிதன் என்கிற மறைமுக பட்ட பேர் விளங்கும், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்த்தாலும். மேலோட்டமான உங்கள் அதிகாரம் முரட்டு குணங்கள் தான் மற்றவர் தென்படும். பேச்சில் கூட மற்றவரை பயமுறுத்தி சாதித்துக் கொள்வீர்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவர் விளையாட்டுகளில், ஆர்வம் இருக்கும், பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமாக காணப்படும். எண்ணின் பலம் குறையுமானால் சண்டை போட்டு கொள்ளுதல், அடிதடி காயங்கள் எலும்பு முறிவு, திடீர் அறுவை சிகிச்சை காய்ச்சல். அம்மை நோய், காமாலை, போன்ற நோயின் பாதிப்புகள். நீங்கள் அதிகார பதவிகளில் இருந்தாலும். வுpயாபார தொழில் நிறுவனங்களில் செயல்பட்டாலும் மற்றவருடன் பேசும் போது சிரித்த முகத்துடன் பேசி வாருங்கள், நகைச்சுவை விசயங்களை பழகி கொண்டு மன இணக்கத்தை போக்கி கொள்ளுங்கள் நன்மை பல தரும். உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் - பவளம். ப்ளட் ஸ்டோன், கர்னலியன் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்கள் - 3,6,9,ன் வரிசைகள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. வெளீர் நீலம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை - தெற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய்,வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் - முருகன்

Comments

Popular Posts