FKart PrmotionalBanners

பர்வதாசனம்

பர்வதாசனம்

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_145609000000.jpg
தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலை வலி, கண்நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக்கூடாது.

பலன் : தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.

தகவல் : டி.எஸ்.கிருஷ்ணன், பதஞ்சலி யோக கேந்திரம்
பழங்காநத்தம், மதுரை.

Comments

Popular Posts