FKart PrmotionalBanners

மயூராசனம்

மயூராசனம்

மயூராசனம்

செய்முறை:

குத்தவைத்து உட்காரவும். இரண்டு கைகளையும் இரண்டங்குல இடைவெளிவிட்டு, தரையில் பதிக்கவும். இரு முழங்கைகளின் மேலும், முதுகை சற்று மேல்நோக்கி தூக்குங்கள். தொப்புளின் அடிப்பகுதி, முழங்கை மேல் இருக்கட்டும். கால்களை மெதுவாக நீட்டி, தலையை நிமிர்த்தியநிலையில், 15 விநாடிகள் ஆசனத்தில் இருங்கள். அதற்கு பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முகம் அழகு பெறும். நரை, திரை பாதிப்புகள் நெருங்காது. இளமை நீடிக்கும். புத்திர பேறுக்கான ஆசனமிது. ஜனன உறுப்புகனின்  இயக்கம் சீராக இருக்கும். விந்து கெட்டிப்படும். விரை வீக்கம் குணமாகும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி, துரிதமாக அமையும். கர்ப்பப்பை-மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

குறிப்பு:

மயூராசனம் செய்வோருக்கு போகஇச்சை கட்டுப்படும். கட்டுக்கடங்காத காம-குரோத எண்ணம் மாறி, சாந்த சொரூபியாக-ஒழுக்கம் மிகுந்தவர்களாக திகழுவர். பயம் வேண்டாம். இச்சை கட்டுப்படுமே தவிர, அற்றுப்போகாது. ராட்சச எண்ணங்கள் மாறி சாத்வீக எண்ணம் மேலோங்கும்.

Comments

Popular Posts