FKart PrmotionalBanners

திரிகோணாசனம்

திரிகோணாசனம்

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_142955000000.jpg
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்

மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத்தண்டும் முதுகுத் தசைகளும் நீட்டப்படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள், முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப்பட்டு தளர்த்தப்படுகின்றன. அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப்படுகின்றன. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்கு அழுத்தப்படுகின்றன. இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.

குணமாகும் நோய்கள்: பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது. மலச்சிக்கலை நீக்கி, பசியினை உண்டு பண்ணுகின்றது. முதுகு, கழுத்து, முழங்கை, இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியினைப் போக்குகிறது. வாயுப்பிடிப்பு, கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.

எச்சரிக்கை: கீழ்முதுகுவலி முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாகச் செய்யவும்.

Comments

Popular Posts