FKart PrmotionalBanners

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் - [ பூரட்டாதி -Purvaproshtapada]

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் - [ பூரட்டாதி -Purvaproshtapada]


ஸ்தல வரலாறு:

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர்  விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பம்சம்: 

ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

சகாதேவன் போல கல்வியறிவு:

கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

தல சிறப்பு:

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி தியானம் செய்துள்ளார். இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வணங்கலாம். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

கோயில் அமைப்பு: 

மூலவர் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

மற்றவர்களின் மனதில் இருப்பதை அறிவதில் கெட்டிக்காரர்கள். திடமான மனமும், உடல் வலிமையும் பெற்றிருப்பர். சுக சவுகர்யங்களோடு வாழ்க்கை நடத்த விரும்புவர். மனைவியை மிகவும் நேசிப்பார்கள். பெரிய மனிதர்களிடம் நட்பு பாராட்டுவர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவர். தொழிலில் அக்கறையோடு ஈடுபடுவர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : அஜைகபாதர் [Ajaikapada]
அதி தேவதை [AtiDevatha]  :  குபேரன் [Kubera]

இருப்பிடம்: 

திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரத்தைஅடையலாம்.

திறக்கும்நேரம்: காலை 7 - 9 , மாலை 5.30 - இரவு 7 மணி.

போன்:+91 - 94439 70397, 97150 37810.

Comments

Popular Posts