பூர்ண சலபாசனம்
பூர்ண சலபாசனம்
செய்முறை:
விரிப்பில் குப்புறப்படுத்த நிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள்.இல்லையெனில்-இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம். முகத்தை நிமிர்த்தி மோவாய்-இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப் பகுதியை மேலே தூக்கவேண்டும். இது குறைந்தபட்சம் அரையடி உயரமாவது இருக்கட்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம்.
பயன்கள்:
முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.
Comments
Post a Comment