FKart PrmotionalBanners

மனஅமைதி இல்லாதவருக்கு மட்டும் உள்ளே வரவும் !

மனஅமைதி இல்லாதவருக்கு மட்டும் உள்ளே வரவும் !

ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுத்து வேறு சில விசயங்களில் மனதை ஈடுபடுத்துவதாகவும். உடலுக்கு ஓய்வு உறக்கம் என்றிருந்தாலும் மனதை சஞ்சலமின்றி ஓய்வாக வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். 

ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.

மன அமைதி தரும் யோகா 

தியானம், யோகா செய்தல் மிகவும் நல்லது. இது மனதை புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள் 

அதிகாலையில் அமைதி 

அதிகாலையில் விழித்தெழுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். அதிகாலை 5 மணிஅளவில் எழுந்து வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அதேபோல் இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப் பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

மனதை லேசாக்கும் இசை

இசையானது மனதை வருடி லேசாக்கும் தன்மையுடையது. விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும். காமெடி படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

Comments

Popular Posts