யோகமுத்ரா
யோகமுத்ரா
இதனால்தான் நம் முன்னோர்களும், ஞானிகளும், செல்வங்களுள் தலைசிறந்த செல்வம், குறைவற்ற செல்வம் ஆரோக்கியம்தான் என்றனர்.
ஆனால் பொருளாதார தேடலில் உடல்நலம் பேணுவது பலருக்கு இயலாத காரியமாகிவிட்டது. உணவருந்தக்கூட நேரமின்றி அலைந்து திரிகின்றனர். உடலுக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே மருத்துவரைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால் மருத்துவர்களால் கூட தீர்க்க முடியாத மதுமேகம், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டு பலர் இன்று அவதியுறுகின்றனர்.
நோய் வரும்முன் காப்பதற்கு நம் முன்னோர்களும், சித்தர்களும் உணவுமுறை, வாழ்க்கை முறை, தியானம், யோகா என பலவற்றை வகுத்துள்ளனர்.
நோய் வரும்முன் தடுக்கவும், என்றும் இளமையுடன் வாழவும் சித்தர்களின் தலைவனாகிய சிவபெருமான் நந்தி தேவருக்கு அருளிய கலைதான் யோகக்கலை. நந்தி தேவர் பதஞ்சலி முனிவருக்கு ஞான சிருஷ்டி மூலம் கற்றுக் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகக் கலைதான் யோகப் பயிற்சி என உலகெங்கும் இன்று பயிற்றுவிக்கப்படுகிறது.
உள்ளத்தையும், உடலையும் ஒருங்கிணைத்து உடலை நோயின்றி காத்து புத்துணர்வுடன் வாழச் செய்வது யோகாசனங்களே. இப்படி சிறப்பு வாய்ந்த யோகாசனங்களில் யோக முத்ரா என்ற ஆசனமும் உண்டு. இவ்வாசனம் மிகுந்த பலன் அளிக்கக்கூடியது.
யோகமுத்ரா
பத்மாசன நிலையில் அதாவது உட்கார்ந்து கொண்டு கால்களின் பாதங்கள் வெளிப்பகுதியில் இருக்குமாறு வைத்துக்கொண்டு உடலை நேராக நிமிர்த்தி கைகளை மிக இளக்கமாக வைத்து முதுகின் பின் புறத்திற்கு கொண்டு வந்து ஙீ வடிவில் வைத்து உடலை முன்னோக்கி வளைத்து கைகள் இரண்டால் கால் கட்டை விரல்களைப் பிடித்து முகத்தை தரையில் பதிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இது கடினமாகத் தோன்றினாலும், நாளடைவில் எளிதாக செய்துவிட முடியும்.
குனியும்போது மூச்சை வெளிவிட்டு, நிமிரும் போது மூச்சை உள்வாங்க வேண்டும். இவ்வாறு மூன்றிலிருந்து ஐந்து முறை செய்தல் வேண்டும்.
பயன்கள்
· கீழ்முதுகுத் தண்டுவலி நீங்கும். உடலின் இரத்த ஓட்டம் சீராகும்.
· தொப்பை குறையும்
· வாயுத்தொல்லை நீங்கும்.
· செரிமான சக்தி அதிகரிக்கும்
· கல்லீரல் பலப்படும்
· நரம்புகள் புத்துணர்வு பெறும்
· கால் மூட்டுகளில் வலி இருப்பின், அவை குறையும்.
Comments
Post a Comment