FKart PrmotionalBanners

தியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்

தியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்

தியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. பிராணவாயுவை சீராக்கி அதன்மூலம் அளப்பரிய சக்தியை உடலுக்குகொடுக்கக்கூடியதுதான் தியானம்.

தவம் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. எல்லோரும் அதை பெரிய விஷயம் எனநினைத்து மன அழுத்தத்தைப் போக்க வழியின்றி தவிக்கிறோம். அருந்தவம் மனஅழுத்தத்தைப் போக்கும் அருமருந்தாகும்.

தவத்தின் ஒரு பகுதியே தியானம் ஆகும். தியானம் தான் தவத்தின் முதல்படி. அதற்கு சரப்பயிற்சியே பிரதானம்.

தியானம் செய்வதற்கு அதிக சப்தமில்லாத நல்ல காற்றோட்டமான பகுதியாக இருக்கவேண்டும்.

தியானம் செய்ய தேர்வு செய்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

பொதுவாக தியானம் செய்ய ஏற்ற நேரம் பிரம்ம முகூர்த்தம் என்றுஅழைக்கப்படும் அதிகாலை 4.00 மணி முதல் 6.30 வரை. சூரிய உதயத்திற்கு முன்எழுந்து காலைக் கடன்களை முடித்து தியானம் செய்வது நல்லது. காலையில் நேரம்இல்லாதவர்கள் மாலையில் செய்யலாம்.

பசியுடனும், தூக்கத்துடனும், உண்டபின்பும் தியானம் செய்வதை தவிர்க்கவும்.

தியானம் செய்வதற்கு உடலும், மனமும் ஓய்வாக இருக்க வேண்டும். இறுக்கமானஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முதலில் பத்மாசனத்தில் அமர்ந்துகொள்ளவும். அதாவது கால்களை நன்கு மடக்கி படத்தில் உள்ளவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். நேராக நிமிர்ந்து முதுகு வளையாமல் இருக்க வேண்டும். ஒரேசீராக காற்றை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.

பொதுவாக தியானம் ஒரு முறைக்கு இருபது நிமிடங்கள் வரை செய்யலாம். முதன்முதலில் தியானத்தை தொடங்குபவர்கள் 5 நிமிடங்களுக்கு மேல் செய்ய இயலாது.காரணம், மனம் ஒரு நிலைப்படாமல் எண்ணங்கள் பறந்தோடும்.

உதாரணமாக தியான நிலையில் அமர்ந்து தியானம் செய்யும்போதுதான் தாம் செய்யவேண்டிய அவசர வேலைகள் நினைவுக்கு வரும். மேலும் நாம் மறந்த பல எண்ணங்கள்பிம்பங்களாக நம் கண் எதிரே தெரியவரும். இதனால் சுவாசத்தை சீராக்கமுடியாமல் தவிர்க்க நேரிடும். இதனால் 5 நிமிடங்கள் அமர்ந்து தியானம்செய்தால் போதுமானது. நாட்கள் செல்லச் செல்ல சுவாசம் சீராகும்போதுநேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். வெறும் தரையில் அமர்ந்து தியானம்செய்தல் நல்லதல்ல. பலகை அல்லது கனமான விரிப்பு மேல் அமர்ந்து தியானம்செய்வது நல்லது.

தியானத்தின்போது மனமானது கட்டுக்கடங்காமல் எதை எதையோ எண்ணும்.குரங்குபோல் அங்கேயும், இங்கேயும் தாவும். நாட்கள் செல்லச்செல்ல மனமானதுகட்டுக்குள் வந்துவிடும். கண்களை மூடிக்கொண்டு சுவாசத்தை சீராக்கவேண்டும். உங்கள் கவனம் மூச்சு விடுவதிலேயே இருக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுக்கும்போது உங்கள் வயிறு விரிந்து இருக்க வேண்டும். வெளியேற்றும் போது வயிறு சுருங்க வேண்டும்.

தியானத்தின்போது மந்திரத்தை சொல்லிக் கொள்ளலாம்.

நாட்டமும் இரண்டு நடுமூக்கில் வைத்தழல்

வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை

ஓட்டமும் இல்லை உணர்வுதான் இல்லை

தோட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே

- திருமூலர்.

தியானம் செய்யும்போது நம் நினைவு நெற்றி நடு புருவத்தின் மத்தியில்இருக்க வேண்டும். அதையே சித்தர்கள் திலர்த காலம், நெற்றிக்கண்என்கின்றார்கள்.

* தியானத்தின்போது ஆதாரங்களுக்கு பிராண வாயு சென்று உடலையும் மனத்தையும்சீராக்கும். தியானமானது காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி எழும் மனவெள்ளத்தை அணைபோட்டு தடுக்கும்.

* மனத்திரையில் அடிக்கடி எழுந்து மறையும் தீய எண்ணங்கள், மன அழுத்தங்கள் மாறும்.

* ஆயுதங்களை எவ்வளவு கூர்மையாக துருப்பிடிக்காமல் வைக்க வேண்டுமோஅதுபோல் மனம் என்னும் ஆயுதத்தை கூர்மையாக சலனமின்றி வைப்பதே தியானம்ஆகும்.

* தியானத்தினால் மன அமைதி உண்டாகிறது.

* தான் என்ற அகங்காரம் மறைகிறது.

* மனதில் புத்துணர்வையும், தன்னம் பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

* கோபம், அச்சம், ஆணவம், பதற்றம், போன்றவை குறைந்து நாளடைவில் மறந்தே போகும்.

* உடலின் செயல்பாடுகளை சீராக்கும் வாத, பித்த கபத்தை அதனதன் நிலையிலேயே வைக்கிறது .

* தியானத்தின்போது நரம்பு மண்டலங்கள் புத்துணர்வடையும். ஆதாரங்கள்ஒருங்கிணையும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு சீராகசென்றடையும். மூளைக்குத் தேவையான பிராணன், எளிதில் கிடைத்து மூளையின்செயல்பாடுகளைத் தூண்டும். இதனால் உடல், உள்ளம், உயிர் மூன்றும்ஒருங்கிணைந்து புத்துணர்வு பெறுகிறது. மேலும் கண் பார்வை தெளிவடையும்.முகப் பொலிவு உண்டாகும். ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் நீங்கும்.

* நல்ல எண்ணங்களை உருவாக்கும்.

தியானத்தின் பயன்களை செல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதனை அனுபவித்து செய்தால்தான் அதன் மகத்துவம் முழுமையாக நமக்கு புரியும்

Comments