FKart PrmotionalBanners

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்


1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்


விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.


3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே


4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்


கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்

அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே

எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்


திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி

Comments

Popular Posts