சனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்
சனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்
சனி பகவானின் அருளை எளிதில் பெற கீழ்க்கண்ட விரதமுறைகளை பின்பற்றலாம்…
- ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காலத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம். அல்லது, ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து சனிபாகவனை வழிபடலாம்.
- சிறிது என்னை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும் போது, அதை தலைக்கு அடியில் வைத்து படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் என்று இந்த பரிகார முறையை பின்பற்றலாம்.
- ஒரு முழு தேங்காயை சனி பகவான் சன்னதியில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
- சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, கரும்பு அல்லது எள் சாதம், வடை மாலை செய்து வழிபட்டு, அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம்.
- சனிபகவானுக்கு நவக்கிரக சாத்தி ஓமங்கள் செய்து வழிபடலாம்.
- எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
- அவரவர் பிறந்த சென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.
- சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது. தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். நெய்வேத்தியம் செய்யும் எள் சாதத்தில் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு, பின் அனைவருக்கும் அளித்து சாப்பிடலாம்.
Comments
Post a Comment