ஸ்ரீ காக புஜண்டர்
ஸ்ரீ காக புஜண்டர்
யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால்
உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும்
சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி
மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும்
பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க
வைப்பவர். இதோ.. அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு
பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள்.
பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.
நற்பவி! நற்பவி! நற்பவி!ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:
ஸ்ரீ காகபுஜண்ட தியானம்
த்விபுஜம் சத்வி நேத்ரம் சஜடாமகுட தாரிணம்
காகதுண்ட முகம் சாந்தம்
பஸ்ம ருத்ராஷ தாரிணம்
முத்ரோ ருத்வய ஹஸ்தம்ச
சிவசிந்தன மானஸம்
பக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்
பாவயே முனி புங்கவம்.
ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி
1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹேத்யான ஸ்தீதாய தீமஹி;
தந்நோ பகவான் ப்ரசோதயாத்.
2. ஓம் காக ரூபாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி;
தந்நோ புஜண்ட ப்ரசோதயாத்.
3. ஓம் காக துண்டாய வித்மஹே
சிவசிந்தாய தீமஹி;
தந்நோ யோகி: ப்ரசோதயாத்.
ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத
ஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:
ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!
நற்பவி! நற்பவி! நற்பவி!
Comments
Post a Comment