FKart PrmotionalBanners

சுவாசத் தியானம்

சுவாசத் தியானம்

சுவாசத் தியானம்

சுவாசத் தியானம் அனைவரும் செய்யக்கூடிய ஒருமுறை அல்லது பயிற்சியாகும். தியானம் செய்யக்கூடிய தலையங்கங்கள் யாவற்றிலும் உடலுக்கு மிகுந்த பலனளிக்க கூடியதொன்றாகும். ஒரு முழுதான சுவாசச் சுற்றில் வளிமண்டல காற்றானது மூக்கு வழி உட்சுவாசமாகி, சுவாசப்பைகளையடைந்து பின்னர் வெளிச்சுவாசமாக வெளியேற்றப்படுவதோடல்லாமல், உடல் முழுவதும் சக்தியை பரப்பிவிடும் உணர்வையும் அனுபவத்தையும் பெறுகின்றோம். இந்த சுவாச செயற்பாடுகளையும் உணர்வுகளையும் உணர்ந்து, அனுபவித்து, தங்குதடையின்றி ஆற்றொழுக்காக நடைபெற வழிசெய்வோமானால், எமது உடலின் செயற்பாடுகளை இயல்பா இலகுவாக்குவதோடு, உடலின் நோவை இலகுவாக கையாள உடலிற்கு உதவி செய்கின்றோம்.



 (1) தியானம் செய்யப்போகும் வேளை அமைதியான சமதளமொன்றில் அல்லது கதிரை ஒன்றில், வசதியாக, உடல் நிமிர்ந்திருக்கும் வண்ணம், கால்களை மடித்து குறுக்கிட்டு, அமர்ந்து கொள்ளவும். 


(2) உடலைத தளர்த்திவைக்கவும். ஆனால் முதுகென்பு நேராக இருக்கட்டும். அதற்காக விறைப்பாக நிற்கும் போர்வீரனைப் போலல்லாது, முன, பின் அல்லது வலது இடமாக சாயாது, தளர்வாக இருந்து கொண்டு, கண்களை மூடி ‘நான் உண்மையாகவே எல்லாவித துன்பங்களிலிருந்தும் நீங்கி சந்தோ~மாக இருப்பேனாக’ என்று மனதிலுள்ளேயே சொல்லிக்கொள்ளுங்கள். இந்த வசனம் சுயநலமானதாகவோ அல்லது கருத்தில் அந்நியமானதாகவோ, தியானம் செய்ய ஆரம்பிக்குமொருவருக்குத் தோன்றலாம். ஆனாலும் அதற்கு பல நல்ல காரணங்களுண்டு. முதலில் ஒருவர் தனக்கு நல்ல சந்தோ~மான நிலை கிடைக்கவேண்டிக் கொள்ளாதபொழுதில், ஏனையோருக்கு நல்ல நிலை கிடைக்கவேண்டும் என உண்மையாகவே விரும்ப முடியாது. நாம் எல்லோருமே எமக்கு அமைதியும் சந்தோ~மும் கிடைக்கவேண்டுமென எமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். நாமனைவருமே இவற்றிற்கு உரித்துடையவர்கள். ஆனால் இதை நம்ப மறுக்கும் பட்சத்தில், எம்மை நாமே தொடர்ச்சியாக தண்டனைக்குள்ளாக்குவதோடு, எம்மைச் சூழ்ந்தோரையும் மிகவும் நுட்பான அறியப்படாத வழியில் தண்டிக்கின்றோம். இரண்டாவதாக, உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதையும், எங்கே அதைக் கண்டு கொள்ளலாம் என்பதையும் சுவாசத்தியானம் மூலம் ஒரு தடவை ஆழ்ந்து நினைத்துப் பார்க்கலாம். ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தால் மகிழ்ச்சி இறந்த காலத்திலுமில்லை எதிர் காலத்திலுமில்லை எனக்கண்டுகொள்ளலாம். இறந்த காலம் போய் முடிந்தது அதை மீட்டிப்பார்க்க எமது ஞாபகசக்தியை முழுதாக நம்பமுடியாதது. எதிர்காலமஇ; எதிர்வு கூறமுடியாத எதுவும் நடைபெறலாம் என்னும், தெரியாத நிலையொன்றைக் கொண்டிருக்கின்றது. ஆகவே இப்பொழுது மட்டும்தான் - நிகழ்காலத்தில்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும். அப்படியாயினும் மகிழ்ச்சியை எங்கே தேடலாமென தெரிந்துகொள்ளவேண்டும். உங்களைச் சூழவுள்ள மாறும் தகவுடையவற்றில்இ உதாரணம் - பார்வை, கேள்வி போன்ற உணர்வுவாயிலாக அறியப்படுபவைவற்றிலோ அன்றி வேறுமனித உறவுகள் மூலமோ மகிழ்ச்சியைத் தேடிப்போவீர்களானால் ஏமாற்றம்தான் எஞ்சும். இது முன்னர் பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்ட மலைச்சரிவில் வீடு கட்டுவதற்கு ஒப்பாகும். உண்மையான மகிழ்ச்சி உங்களின் உள்ளிருந்துதான் வரவேண்டும, வேறெங்கும் தேடிப்போக வேண்டாம். தியானம் என்பது பெரும் புதையலைத் தேடிப்போவது போன்றதாகும். இந்த புதையலைக்; கண்டவர்கள், மனம் எவ்வளவு உறுதியான என அறிந்திருக்கிறார்கள். எமது மனப் புதையலை அறிந்துகொள்ள எமக்கு சில கருவிகள்; வேண்டும். எம்மைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை வளர்ப்பதுதான், இந்தக்கருவி அல்லது சாதனங்களில் முதலாவதாகும். அதைத்தான் இங்கு இப்பொழுது செய்ய முயல்கின்றோம். இரண்டாவதாக இந்த நல்ல செய்தியை மற்றவர்களுக்குமாக பரப்பிவிடவேண்டும். இப்பொழுது உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள் “வாழும் எல்லா உயிரினங்கள், அவை எதுவாகவிருந்தாலும் இறந்த காலத்தில் ஏதாவது தீங்கு எனக்குச் செய்திருந்தாலும் அவை யாவும் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளட்டும்”. இவ்வாறான ஒரு சிந்தனையை உங்கள் மனதில் உண்மையாக நீங்கள் வளரவிடலாம். இன்னொருவரைப்பற்றி கறுவிக்கொண்டு தியானத்தில் ஈடுபடப் போவீர்களானால்இ நீங்கள் உங்களினுள்ளே சென்று பார்க்கமுடியாது.


 (3) உங்களின் மனதை தெளிவுபடுத்தி, வெளிவிவகாரங்களை வெளியிலேயே நிறுத்தி வைத்துவிட்டபின்புதான், நீங்கள் சுவாசத் தியானத்தில் எண்ணத்தைக் குவிக்கலாம். 


(4) உங்களின் கவனம் முழுவதையும் சுவாச நிகழ்ச்சிக்கு கொண்டுவாருங்கள். 


(5) உட்சுவாசத்தையும் வெளிச்சுவாசத்தையும் நீண்டதாக உள்ளெடுத்து வெளிவிடவும். இரண்டு மூன்று தடவைகள் இவ்வாறு செய்த பின்பு, உங்களின் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் உங்களின் கவனத்தைக் குவியச் செய்யவும். உடலின் இது சுவாச நிகழ்வு இலகுவாக உணரப்படும் பகுதியாயின் நல்லது. இப்பகுதி மூக்கு, நெஞ்சுப்பகுதி, வயிறு போன்று ஏதாவது உடற்பகுதியாக இருக்கலாம். தெரிவு செய்த இந்தப்பகுதியில் மூச்சை உள்வாங்கி வெளிவிடும் பொழுது என்ன மாற்றம் நிகழ்கின்றதென்பதை கவனித்துப் பார்க்கவும். சுவாசத்தை கட்டாயப்படுத்தி உள்ளிழுத்து பின் வலிந்து நிறுத்திவைக்கவேண்டாம். சுவாசம் இயல்பானதாக இருக்கட்டும். ஆனால் அது எவ்வாறு உணரப்படுகிறதென்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும். இது தனிச்சுவை கொண்டதாக கருதி அந்த உணர்வை நீடிக்கச் செய்வதாக வைத்துக்கொள்ளவேண்டும். மனது குவியத்தைக் குழப்பி, அலைந்து திரிய கிளம்பிவிடுமானால் மீளவும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு நடைபெறுவதுபற்றி மனம் தளரவேண்டாம்;. மனது 100 தடவைகள் அலைந்து திரிய முனையுமாயின் 100 தடவைகள் மீண்டும் திருப்பிக்கொண்டுவரவேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மனது கட்டுப்பாட்டினுள் வரும். இந்தப் பயிற்சியை பொறுமையுடன் செய்து வருவோமாயின் குழப்பம் செய்யும் சிந்தனைகள் குறைந்து மறைந்துவிடும், உடல் தளர்ந்து மனத்தில் அமைதி கிடைக்கும். மனதில் தெளிவும, எல்லாம் புதிதாக்கப்பட்டதாகவும் உணர்வீர்கள். கலங்கிய குட்டையில் எல்லாம் குழம்பியிருந்த நிலைமாறி, குப்பை கூழம் எல்லாம் அடியில் படிய, தெளிந்த நீர் மேலெழுந்தது போன்று மனம் அமைதி கொள்வதைச் சுவாச தியானத்தின் வாயிலாக உணர்ந்தனுபவிக்கலாம். மனம் அமைதியடைந்த நிலையில் சிறிதளவு நேரம் நிலைத்து நிற்கவேண்டும். 


(6) உடலில் ஒரு பாகத்தைக் குறித்து வைத்து சுவாச தியானத்தை ஆரம்பித்தபின்பு, ஏனைய உடற்பகுதிகளில் சுவாசம் எவ்வாறு உணரப்படுகிறது என அவதானியுங்கள் முதலில் தொப்புள் புள்ளிக்கு கீழாக உங்கள் கவனத்தைக் குவிக்கலாம்.


 (7) மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது இப்பகுதி எவ்வாறு உணரப்படுகிறது என கவனியுங்கள். ஏதாவது அசைவு உணரப்படாவிடில், அங்கு எவ்வித அசைவுமில்லை என அறிந்துகொள்ளுங்கள். ஏதாவது அசைவு உணரப்படுமாயின் அசைவு ஏற்றத்தாழ்வுடையதா அல்லது அப்பகுதியில் இறுக்கம் அல்லது இழுக்கப்படுவது போன்று இருக்கிறதா என கவனியுங்கள். இறுக்கம் அல்லது இழுவை இருப்பதானால், உடலைத் தளர்வு நிலைக்கு கொண்டுவரவேண்டும். ஒழுங்கற்றதான சுவாசமாகவிருப்பின் அதனை ஒரு சீருக்கு கொண்டுவர முயல வேண்டும். இப்பொழுது உங்கள் கவனத்தை நீங்கள் குறித்த இடத்தின் வலது பக்கமாக - வயிற்றின் வலது கை கீழ் மூலை இடங்களுக்கு மாற்றவும். இதை திருப்பி திருப்பி செய்துபார்க்கவும். பின்னர் வயிற்றின் இடது கை கீழ் மூலை, பின்னர் தொப்புள் புள்ளி ........ வலது பக்கம்........ இடது பக்கம் ........ மீண்டும் தொப்புள் புள்ளி வலது ......... இடது ........ மேலாக சென்று நடுநெஞ்சு, வலது பக்கம் ........ இடது பக்கம் ....... இன்னும் மேலாக தொண்டையின் அடிப்பகுதி …….. வலது பக்கம் ….. இடது பக்கம் ......, உச்சந் தலை ....... வலது பக்கம் ....... இடது பக்கம் ....... ( ஒவ்வொரு உடற்பகுதியிலும் பல நிமிடங்களை தரித்து நிற்கவும் ) 


(8) ஒவ்வொரு உடற் பகுதிக்கும் சென்று உடலை அதை குறிப்பாக கவனித்து தளர்த்தி இலகுவாக்கி வைத்திருப்பதனால் அப்பகுதியிலிருந்த பிடிப்பு, அழுத்தம் போன்றன அற்றுப்போய்விடும்.


 (9) நீங்கள் வீட்டிலிருந்து சுவாசத் தியானம் செய்வதாகவிருந்தால், உடலின் எல்லாப் பாகங்களையும் - தலை, முதுகுப் பகுதி, புயங்கள், கால்கள், கைவிரல்கள், கால் பெருவிரல் போன்ற பகுதிகளைத் தரிசித்துவரலாம். பின்னர் முன்பு சென்று வந்த பகுதிக்கு கவனத்தைக் குவிக்கலாம். உங்கள் கவனம் இதில் இருக்கும்பொழுது, என்ன நடைபெறுகிறது என அறியும் நிலை உடல் முழுவதும், தலை முதல் பாதம் வரை பரவி விடுகிறது. இப்பொழுது நீங்கள் வலைப்பின்னலின் மத்தியிலமர்ந்த சிலந்தியைப்; போல், மத்தியில் அமர்ந்தாலும், வலைப்பின்னலின் எப்பாகத்திலும் நடைபெறுவதை உணரும் திறனுடன் இருப்பீர்கள். இவ்வாறான நிலையை அடைவதற்கு சில காலப்பயிற்ச்சி தேவை. ஏனெனில் நம் மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டுமே குவிந்துகொள்ளப் பார்க்கும் தன்மையுடையது. உங்கள் உடலின் எல்லாக் கணுக்களிலிருந்தும் சுவாசம் நடைபெறுவதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்களின் அறிநிலை இவ்வாறே இருக்க சிலநேரம் வைத்துக்கொள்ளுங்கள் …….. வேறெவ்விடமும் நீங்கள் போகத்தேவையில்லை …….. வேறெதையும் சிந்திக்க தேவையில்லை …… இப்பொழுது மெதுவாக தியான நிலையிலிருந்து வெளிவரலாம். சுவாசத்தியானம, தியானம் செய்வதன் ஆரம்ப நிலையாக இருந்த பொழுதிலும் மிகவும் சக்திவாய்ந்ததாகும். இதை அப்பியாசிக்கும் பொழுது, வெளிப்புறக் காரணிகள் எவற்றின் உதவியுமின்றி, மனவமைதி, மனநிறைவு பெற முடியுமென்னும் மனநிலையுண்டாக வாய்ப்புண்டு. கொந்தளித்துக் குழம்பும் சிந்தனைகள் மடிந்து போகும்போது, மனம் அமைதியும் நிலைகொண்ட ஆனந்தமும் இயல்பாகவே அகமிருந்து வரும். இந்நிலையில் வரும் மனவமைதியும், மகிழ்வான நல்ல நிலையும், துரிதமாக இயங்கும் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையை, இலகுவாக எதிர்கொள்ள உதவிசெய்யும். வாழ்க்கையில் நாம் கருதும் மனவழுத்தங்கள், பாரங்கள், சுமைகள் யாவும் மனம் தரும் மாயத்தோற்றங்கள். எமது உடல் நோய் கூட மனவழுத்தங்களின் வெளிப்பாடென்றே கூறலாம். தினந்தோறும் 10-15 நிமிடங்களுக்கு சுவாசத் தியானம் செய்துவர மனவழுத்தத்தைக் குறைக்கலாம். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ள மனப்பாரம் குறைந்து, மனம் இலேசாவதான உணர்வு பெருக, பெரும்பாலான எமது வழமையான பிரச்சனைகள் விலகிப்போகும். சிக்கலான நிலைகள் இலகுவாக, மற்றோர் மட்டில் இயல்பானதோர் இளகிய இதமாக பழகும் நிலை வியாபிக்க உறவு நிலைகள் மெதுவாக மேம்படும்.

Comments

Popular Posts