ஆனை ந்து என்கிற பஞ்சகவ்யம்

ஆனை

ந்து என்கிற பஞ்சகவ்யம்


வடமொழி அன்பர்கள் பூசை செய்யும் போது ‘பஞ்சகவ்யம்’ வைத்து அபிஷேகம் செய்வார்கள். தமிழில் அதற்குப் பெயர் “ஆனைந்து”. இதுவும் வடமொழி நம் தமிழிலிருந்து “சுட்டதுதான்”.


பஞ்சகவ்யம் என்று அவர்கள் உபயோகிப்பது :
பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர் மற்றும் பசுவின் சாணம் ஆகிய ஐந்தும்.

தமிழில் ஆனைந்து என்பதற்கு பொருள் காண இயலாமல் பால், தயிர், நெய் என்பதோடு ஐந்து பொருட்கள் வர இன்னும் இரண்டிருக்கிறதே என்று எண்ணி ஆவின் சிறுநீரையும் சாணத்தையும் தவறாக இணைத்திருக்கிறார்கள்.

சேக்கிழார் சண்டேசுவர நாயனார் புராணத்தில் பசுவின் மடியைச் சிறப்பித்து…
“ஆயசிறப்பினாற் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும்
நாயனார்க்கு வளர்மதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேயவேணித் திருமுடிமேல் விரும்பி ஆடிஅருளுதற்குத்
தூயதிருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச்சுரபிகள்தாம்”
என்று பாடியருளுகிறார். 

ஆக பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பொருள் ஐந்தும் திருமஞ்சனம் என்றும் அவையே அபிடேகத்திற்கு உரியவை என்றும் திருமஞ்சனத்திற்கு ஐந்து பொருள்களை பசுவின் சுரபியாகிய மடி கொடுக்கிறது என்றார். 

சாணமோ, சிறுநீரோ பசுவின் மடியிலிருந்து வருவதல்ல.அவை கழிவுப்பொருள்கள். சுரப்புப் பொருள்களல்ல.எனவே, பசுவின் மடியில் இருந்து சுரக்கும் பால் பொருளிலிருந்துதான் நாம் ஐந்தைக் கொள்ள வேண்டும். பசுவின்பால் திரிந்து ஐந்து பொருட்களை நமக்கு அளிக்கிறது. 1) பால், 2) தயிர், 3) மோர், 4) வெண்ணைய், 5) நெய்.

(நன்றி: செந்தமிழ் சிவாகம பூசை செய்வது எப்படி? புத்தகம்)

Comments

Popular Posts