FKart PrmotionalBanners

ஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்

ஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்

ஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்
என்அசோகன்
      ஆன்மாவின் செயல்திறனைப் பற்றிக் கேள்விப்படுகின்ற சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்அதே சமயத்தில் ஆன்மிகம்என்பது மிகப்பெரிய விஷயம் என்பதால் அதைக் கையாளத் தம்மால் முடியுமாஎன்ற தயக்கமும் வருகிறது.உயர்ந்த பக்குவம் கொண்டவர்கள்தாம் ஆன்மீகத்துக்கு ஏற்றவர்கள் என்றொருகாலமிருந்ததுஆனால் சத்தியஜீவியம் என்றோர் உயர்ந்த ஆன்மீக சக்தி மனிதனை நாடி கீழிறங்கி வந்துள்ளது என்பதும் இப்போது உண்மையாகும்நவீனத் தொழில்நுட்பமும்,ஜனநாயகமும் சாதாரண மக்களின் வாழ்வை இன்று உயர்த்தியுள்ளதுபோல் ஆன்மீகமும் இன்று சாதாரண மனிதனுக்குப் பயன்படும் வகையில் எளிமையாகியுள்ளது.
      ஆன்மாவின் சக்தி எவ்வளவு பெரியது என்பதை நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பரிசோதித்துப் பார்க்கலாம்நாம் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் ஒரு விற்பனையாகவோபள்ளிக்கூட பரீட்சையாகவோநோயாளியைக் குணப்படுத்தும் சிகிச்சையாகவோ அல்லது நீதிமன்றத்தில் நடக்கும் வழக்காகவோ இருக்கலாம்.இப்படித் தேர்ந்தெடுத்த விஷயத்தில் ஆன்மீகப் பண்புகளான மௌன சக்தி,அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பாராட்டுதல்தணிவான பேச்சு, சமநிலை போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும்நம்முடைய பரிசோதனைக்கு உட்பட்ட விஷயத்தின் ஒவ்வொரு செயலும் அன்னையை நினைவுபடுத்திக் கொள்வதும் ஆன்ம சக்தியைச் செயல்பட வைக்கும்துணிக்கடை வைத்திருக்கும் ஒரு சிறு வியாபாரிதம்முடையகடை விற்பனையை இப்படிப்பட்ட பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டார்.அவருடைய சராசரி தினசரி விற்பனை 10,000 ரூபாய் என்ற அளவில் இருந்ததுஅவருடைய கடைக்கு வந்த நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்மணியைப் பார்த்தபொழுதுஅவர் 200ரூபாய்க்குத்தான் துணி வாங்குவார்என்று கடைக்காரருக்குத் தோன்றியதுஇப்படி வந்தவருடைய வாங்கும் திறனுக்கு ஓர் அளவு வைப்பது சரியன்று என்று கருதி,அவ்வெண்ணத்தை விலக்கினார்விற்பனை விஷயமாக அப்பெண்மணியிடம் பேச ஆரம்பித்தவுடன் அவர், "நான் ரூ.200க்கு புடவை வாங்கத் தான் வந்தேன்அடுத்த மாதம் ரூ.3000க்கு வாங்க வேண்டிய அவசியம் உள்ளதுஅதற்குண்டான துணிமணிகள் இப்பொழுது இங்கிருந்தால் அவற்றையும் இப்பொழுதே வாங்கிவிடலாம்என்று தோன்றுகிறது'' என்றார்.  உடனே கடைக்காரர்இப்பெண்மணி விவரித்த புடவையைக்கொண்டு வந்து காட்டினார்அதைப் பார்த்தவுடன், "இது தான் என் மனத்தில் இருந்தது''என்று சொல்லி உடனே அதை வாங்கினார்ஓர் அபிப்பிராயத்தை விலக்கியதால் விற்பனை பெரிதாகி உள்ளது என்பதைக் கவனித்த கடைக்காரர்இவ்விஷயத்தில் தனது ஆன்ம சக்தியை முழுமையாகப் பயன்படுத்த விரும்பிஒரு நிமிடம் மௌனமாகத்தியானித்தார்அதைத் தொடர்ந்து அப்பெண்மணி, "எங்கள் வீட்டில் ஒரு கல்யாணம் வருகிறதுஅதற்குண்டான துணிமணி எடுப்பதை இப்பொழுது செய்ய உத்தேசமில்லாமல் இருந்தேன்.  ஆனால் உங்கள் கடையில் எல்லாமிருப்பதைப் பார்த்தவுடன் மீண்டும் மாலை வந்து ரூ.50,000க்கு துணியெடுக்கத் தீர்மானித்துள்ளேன்''என்றார்கடைக்காரருக்கு ஆன்ம சக்தி பலித்ததைப் போல் எல்லோருக்கும் பலிக்கவாய்ப்பு உண்டு.  முதலில் எந்த அளவுக்கு ஆன்ம சக்தி மேல் நமக்கு நம்பிக்கை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்சிறு விஷயத்தில் ஆன்ம சக்தி சிறப்பாக வேலை செய்கிறது என்பது புரிந்துபிறகு பெரிய விஷயத்தில் பரிசோதித்துப் பார்க்கலாம்.
     அப்பெரிய விஷயம் மகளின் திருமணம் அல்லது புதிய தொழில் முயற்சி அல்லது மகனின் வெளிநாட்டு வேலை என்றிருக்கலாம்.  விஷயம் பெரிதாகும்போதுசந்தேகம் எழும்இப்படிச் சந்தேகம் தலையெடுத்தால்அதை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும். 12 வருடங்களுக்கு முன்பு கிளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் துணிந்து அந்த வேலையை விட்டுவிட்டுசுயமாகத் தொழில் துவங்கினார்வருடாந்திர விற்பனை ரூ.70 லட்சத்தை எட்டியதுஇப்படி கிளார்க் வேலையிலிருந்து ஒரு கம்பெனியின் நிர்வாக இயக்குநராக உயர்ந்தது அவருடைய மனநிலைக்குப் பெரிய முன்னேற்றமாக இருந்தது.
     அன்னை மேல் பெரிய பக்தியோ அல்லது நம்பிக்கையோ கொண்டவர் இல்லை.ஆனால் அவருடைய மனைவியும்மாமியாரும் அன்னை பக்தர்கள்வந்திருக்கும் வியாபார முன்னேற்றம் அன்னையின் ஆன்ம சக்தி செயல்படுவதால் வந்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்ஒவ்வொரு தடவையும் அவர் புதுத்தொழில் வாய்ப்பைப் பற்றிப் பேச்செடுத்த பொழுதும் இவர்கள் ஆன்ம சக்தியை அவ்விஷயத்தில் செயல்பட வைப்பார்கள்இப்படிச் சுமார் பன்னிரண்டு தடவை அவர்கள் ஆன்ம சக்தியைப் பயன்படுத்தினார்கள்ஆன்ம சக்தி செயல்படத் துவங்கிய முதல் வருட இறுதியில் அவருடைய வியாபாரம் ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.5.50 கோடிக்கு உயர்ந்ததுஅடுத்த வருடம் ரூ.11 கோடியை எட்டியதுஇப்படி ஆன்ம சக்திவெற்றிகரமாகச் செயல்படும் போதுபலன்கள் நூறு மடங்கு பெரிதாகும்குறைந்தபட்சம் பத்து மடங்காவது அதிகரிக்கும்.

Comments