FKart PrmotionalBanners

தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்



மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார். அவை பின்வருமாறு;
வ.எண்
தமிழ்க் கருத்து
ஆரியக்கருத்து
1
பிறப்பாற் சிறப்பில்லை
பிறப்பாற் சிறப்புண்டு
2
தொழில் பற்றிக் குலம்
பிறப்புப் பற்றிக் குலம்
3
உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில்
உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்
4
நால்வருணம் என்பது மனிதர்களின் பாகுபாடு
நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு
5
தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன்
தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்
6
இறந்த முன்னோர்களே, தென்புலத்தார்
படைப்புக் காலத்தில் நான்முகனால் படைக்கப்பட்ட தேவ வகுப்பினர்.
7
விருந்தோம்பல் குலமுறை பற்றாதது
விருந்தோம்பல் குலமுறை பற்றியது
8
கல்வி அனைவருக்கும் பொது
கல்வி பிராமணனுக்கே சிறப்பு
9
குற்றத் தண்டனை, நடுநிலை பற்றியது
குற்றத் தண்டனை, குலமுறை பற்றியது
10
அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை
தருமம் என்பது வருணாசிர ஒழுக்க வேறுபாடு
11
அறம் பெற ஏழைகளெல்லாரும் உரியர்
அறம் பெற பிராமணரே உரியர்
12
தமிழே தெய்வமொழி
வடமொழியே தேவமொழி
13
கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும்
கோயில் வழிபாடு வடமொழியில் இருத்தல் வேண்டும்
14
இந்திய நாகரிகம் தமிழரது
இந்திய நாகரிகம் ஆரியரது
15
சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம்
சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்
16
தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது
எது செய்தும் தாயைக் காக்கலாம்
17
இரப்பது இகழ்ச்சி
இரப்பது இகழ்ச்சியன்று
18
இல்லறத்தாலும் வீடு பெறலாம்
துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்
19
இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு
மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு
20
துறவறம் எல்லார்க்கும் பொது
துறவறம் பிராமணர்க்கே சிறப்பு
21
துறவு நிலை ஒன்றே
துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு
குபூசகன்: புதல்வர் அல்லது உறவினரிடல் உண்டி பெற்று இலைக்குடிலில் வசிப்பவன்,
பகூதன்: ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஓழுகுபவன்,
ஹம்சன்: பலர் வீடுகளில் இரந்துண்பவன்,
பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன்.

Comments

Popular Posts