FKart PrmotionalBanners

சிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

சிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்


சிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
சிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

சிவன் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
நந்திகேஸ்வரர்
நந்தீஸ்வர நமஸ்துப்யம்
ஸாந்தா நந்த ப்ரதாயக
மஹாதேவேச ஸேவார்த்தம்
அநுக்ஞாம் தாதுமர்ஹஸி
வந்தே வ்ருஷப ஸ்வரூபிணே
தீக்ஷ்ண ச்ருங்காய
துங்காய வேத பாதாய நந்திநே.
விநாயகர்
ஏக தந்தம் சூர்ப கர்ணம்
கஜ வக்த்ரம் சதுர்புஜம்
பாசாங்குச தரம் தேவம்
த்யாயேத் ஸித்தி விநாயகம்
உத்தமம் கண நாதஸ்ய
வ்ரதம் ஸம்பத்கரம் சுபம்
பக்தானாம் இஷ்ட தாதாரம்
ஸர்வ மங்கள காரகம்
த்யாயேத் கஜாநனம் தேவம்
தப்த காஞ்சன ஸன்னிபம்
சதுர் புஜம் மஹா காயம்
ஸர்வாபரண பூஷிதம்
நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
சுப்ரமண்யர்
நீலகண்ட வாஹனம் த்விஷட் புஜம் கிரீடினம்
லோலரத்ன குண்டல ப்ரபாபிராம ஷண்முகம்
சூலசக்தி தண்ட குக்குடாக்ஷமாலிகாதரம்
பாலமீச்வரம் குமார சைல வாஸினம் பஜே.
வல்லி தேவயானிகா ஸமுல்ல ஸந்தமீச்வரம்
மல்லி காதி திவ்ய புஷ்ப மாலிகா விராஜிதம்
ஜல்லரீ நிநாத சங்க வாதன் ப்ரியம் ஸதா
பல்ல வாருணம் குமாரசைல வாஸினம் பஜே
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
சிவபெருமான்
விச்வேச விச்வ பவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனநக குணாதி கேச
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ
ஸம்ஸார துக்க கஹனாத் ஜகதீச ரக்ஷ
கௌரீ விலாஸ பவநய மஹேச்வராய
பஞ்சாந நாய சரணாகத கலம்பகாய
சர்வாய ஸர்வஜகதா மதிபாய தஸ்மை
தாரித்ய துக்க தஹநாய நம: சிவாய
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டு மயன்மாற் கரியோய் நீ
வேண்டி யென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாதுஅருள் செய்தாய்
யானு மதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பு அன்றே.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
அம்பிகை
மாணிக்ய வீணா முபலா லயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுள வாக் விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோளாமாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.
சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ
நித்யாநந்த மயீ நிரஞ்ஜனமயீ தத்வம் மயீ சிந்மயீ
தத்வாதீதமயீ! பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ
ஸர்வைச்வர்ய மயீ ஸதாசிவமயீ மாம்பாஹி மீநாம்பிகே.
நித்யா நந்த கரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த் தூதாகிலகோரபாவநகரீ ப்ரத்யக்ஷமஹேஸ்வரீ
ப்ராளேயாசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷõம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதாந்த பூர்ணேச்வரீ
கண்ணியது உன்புகழ்; கற்பது உன்நாமம்; கசிந்துபத்தி
பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்ன நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம்ஏதுஎன் அம்மே! புவிஏழையும் பூத்தவளே.
நடராஜர்
க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம்
த்ரிணேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்
ஸதா சிவம் ருத்ரம் அனந்தரூபம்
சிதம்ப ரேசம் ஹ்ருதி பாவயாமி.
குனித்த புருவமும். கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம் போல், மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
பனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே.
துர்கை
துர்காத் ஸந்த்ராயதே யஸ்மாத் ÷வீதுர்கேதி கத்யதே
ப்ரபத்யே சரணம் தேவீம் தும்துர்கே துரிதம் ஹர
தட்சிணாமூர்த்தி
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயேஸர்வ வித்யாநாம் தக்ஷிணா மூர்த்தயே நம:
அப்ர மேயத் வயாதீத நிர்மல ஜ்ஞான மூர்த்தயே
மநோ கிராம் விதூராய தக்ஷிணா மூர்த்தியே நம:
சிந்முத்தித கரகமலம் சிந்தித பக்தேஷ்டதாயகம் விமலம்
குருவர மாத்யம் கஞ்சந நிரவதிகாநந்த நிர்பரம் வந்தே
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற  கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்து பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
சண்டிகேசர்
நீலகண்ட பதாம் போஜ பரிஸ்புரித மாநஸ
சம்போ: ஸேவாபலம் தேஹி சண்டேச்வர நமோஸ்துத
சண்டிகேசி
பராசக்தி பாதம் போஜ பரிஸ்புரித மாநஸ
அம்பா ஸேவாபலம் தேஹி சண்டிகேஸி நமோஸ்துத
பைரவர்
ரக்தஜ்வால ஜடாதரம்ஸுவிமலம் ரக்தாங்க தோஜோமயம்
த்ருத்வா சூலகபால பாசடமரூந்லோகஸ்யரக்ஷõகரம்
நிர்வாணம்சுநவாஹநம் த்ரிநயநம் ஸாநந்தகோலாஹலம்
வந்தே பூதபிசாசநாத வடுகம் ÷க்ஷத்ரஸ்யபாலம்சிவம்
சூரியன்
ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்
சந்திரன்
ததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.
செவ்வாய்
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்.
புதன்
ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோ பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்.
குரு
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச குரூம் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
சுக்ரன்
ஹிமகுந்த ம்ரூணா லாபம் தைத்யா நாம் பரமம்குரும்
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்
சனி
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
ராகு
அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம் தம்ராஹும்ப்ரணமாம்யஹம்
கேது
பலசா புஷ்பஸங்காசம் தாரகாத்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
கோயிலினின்று வெளியே வந்து
மஹாபலிமூசா; ஸர்வ சிவாக்ஞா பரிபாலகா;
மயா நிர்வர்த்திதா யூயம் கச்சந்து சிவ ஸந்நிதௌ.
வெளியே செல்லுகையில்
சிவநாமனி பாவி தேந்தரங்கே மஹதி
ஜ்யோதிஷி மானினீ மபார்த்தே
துரிதாந்ய பயாந்தி தூரதூரே முஹுராயந்தி
மஹாந்து மங்களானி.

Comments

Popular Posts