FKart PrmotionalBanners

Temples of Chennai - Pancha Mukha Kalli, Vavikkadai, Chennai. [பஞ்சமுக காளி , வாவிக்கடை] சென்னை.

Temples of Chennai - Pancha Mukha Kalli, Vavikkadai, Chennai. [பஞ்சமுக காளி , வாவிக்கடை] சென்னை.


பஞ்சமுக காளியம்மன்
காளியம்மன் கரியகாளியம்மன், கொங்காலம்மன், வெங்காளியம்மன், பத்ரகாளி, வனக்காளி எனப் பலவகைப் பெயர்களால் வழிபடப்படுகின்றாள்.

தீமையையும், தீயவர்களையும், அழித்து நல்லவர்களைப் பாதுகாக்கும் வாவிக்கடை கலத்தில் ஐந்து முகங்களோடு பஞ்சபூதங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பஞ்சமுக காளியம்மனாக கோயில் கொண்டிருக்கிறாள்.
மேற்கு திசை நோக்கி அன்னையின் கருவறை அமைந்துள்ளத. பக்தர்கள் வரிசையாக ஒருவர் ஒருவராக
கருவரை வரை சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது பக்தர்கள் எழுப்பும் " ஜேய் ஜேய் சக்தி"கோஷம் எங்க்கும் எதிரொலிக்கிறதுகருவறையின் நுழைவாயிலில் இரண்டு காவல் தெய்வங்களைக் காணமுடிகிறது

கோயிலில் முன்புபெரிய நாக உருவம், வேல், ஊஞ்சல், ஆகியவை காணப்படுகின்றன. குபேர விநாயகர், கன்னிமாருக்கு தனி
சன்னதிகள் உள்ளன.

தெற்கு நோக்கி யோக முனியப்பகவாமி, யோக கருப்பண்ணசாமி, பாம்பாட்டி சித்தர், தன்னாசியப்ப சுவாமி ஆகியோர் தனித்த்னியாக எழுந்தருளியுள்ளார்.

இக்கலத்தினருகேயுள்ள ஊரில் வசித்து வந்த பக்தர் ஒருவரின் கனனில் அன்னை வழங்கிய கட்டளையின்படியே இந்த இடத்தில் கோயில் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இங்கு முக்கிய நாட்களில் குபேர யாகம், சண்டி யாகம், துர்கா லட்சுமி யாகம் ஆகியவை நடைபெருகின்றனஅம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெருகின்றன.

கோயில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

பஞ்சமுக காளியை வழிபடும் பக்தர்களின் நோய்கள் குணமாகின்றன என்பது நம்பிக்கை. தொழிலில் மேன்மை ஏற்பட்டு வளம் கிடைப்பதால், அம்மன் சொர்ண பஞ்சமுக காளியம்மன் என்றும் அழைக்கப்படுகிறதுஇது மிக சக்திவாய்ந்த ஓர் கோயிலாக திகழ்கிறது

* பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வாவிக்கடை உள்ளது. 

Comments

Popular Posts