FKart PrmotionalBanners

கிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்


அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.



அழகு.............இளமை...... கிரீன் டீ................


கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்

  • ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
  • ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
  • இதய நோய் வராமல் தடுக்கிறது.
  • ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
  • புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
  • எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
  • பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
  • வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
  • சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
  • பருக்கள் வராமல் தடுக்கிறது.
  • நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
  • மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Source:Daily Thanthi (Sunday Magazine 20/11/2011)



பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

Comments

Popular Posts