FKart PrmotionalBanners

அருணகிரிநாதர் - சிவாயநம


அருணகிரிநாதர் - சிவாயநம
-----------------------------------------------
முருக குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான
குழக சிவசுத சிவயநம வென குரவன் அருள் குருமணியே என்
அமுத இமையவர் திமிர் தமிடுகட லதென அநுதினம் உனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடுமபய மிடுகுரல் அறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறை கொடமர் பொரு மயில்வீரா
நமனையுயிர் கொளுமழலிணை கழல்நதி கொள்சடையினர் குருநாதா
நளின குருமலை மருவியமர் தரு நவிலும் மறைபுகழ் பெருமாளே.
--------------------------------------------------------------------------
பொருள்:
குமரா! குருபரா! முருகா! சரவணா, குகா! சண்முகா! சிவகுமாரா என்று பக்தர்களால் அழைக்கப்படுவனே!
யானைமுகனின் தம்பியே!
சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்கு உரிய சிவபெருமான் பெற்ற குருமணியே!
தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட பேரோசையோ என்று சொல்லும்படியாக, நாள்தோறும் உன்னை அடியார்கள் ஆரவாரத்துடன் கோஷமிடுவதை நீ அறிய மாட்டாயோ?
ஏழுகடல்களும், உலகங்களும் அழிந்து போகவும், திசைகள் யாவும் தூள்படவும் போருக்கு வந்த சூரர்களின் கிரீடமும், உடலும் பூமியில் சாய்ந்து விழும்படி உயிர் கவர்ந்த வெற்றிவேலனே!
கழல் அணிந்த திருவடிகளைக் கொண்டவனே!
எமனுக்கு எமனே!
கங்கை ஆறைத் தலையில் சூடியவனும், ஜடாமுடியை உடையவனுமான சிவபெருமானின் குருநாதனே!
நீர் நிறைந்த தாமரை மலர்ந்த வளம் மிக்க சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமானே!
வேதங்களால் புகழப்படுபவனே!
அருள்புரிய வேண்டும்.

விளக்கம்: சிவபெருமானை சிவாயநம என்றும், நம(ச்)சிவாய என்றும் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

"சிவயநம' (சிவாயநம) என்று சொல்வதன் காரணம், இம்மந்திரம் முக்தியைத் தரக்கூடியது என்பதால் தான்.

இவ்வுலகில் வாழும் மக்கள் செல்வச்செழிப்புடன் திகழ விரும்பினால் தினமும் "நம(ச்)சிவாய' என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். முக்தியா, செல்வமா எதை கேட்கிறோமோ அதைத்தருவார்கள் சிவபெருமானும், அவரது முத்துப்பிள்ளை முருகனும்!

Comments

Popular Posts