FKart PrmotionalBanners

பைரவர் வழிபாடு கைமேல் பலன்




ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்!!!!


தியான மந்திரம் 

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .


பைரவ காயத்ரி

ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!


http://omkarhills.org/templates/Ashram/Kalabhairava.JPG



பைரவரை வழிபாடும் முறை :
http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 
சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 

உங்கள் பிரார்த்தனை  நிறைவடைந்த பிறகு பைரவருக்கு கடைசி சனி கிழமையாக  வடை மாலையும் , தயிர் சாதமும் நிவேதனமாக படைத்தது உங்கள் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்

தகவல் : சாய் பாபா

Comments

Popular Posts