FKart PrmotionalBanners

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்





உங்களது பிறந்த ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் சிக்கி,கடிகாரச் சுற்றுப்படி அனைத்துக்கிரகங்களும் கேதுவை நோக்கிச் சென்றால் அது கால சர்ப்ப தோஷம் ஆகும்.



சிலருக்கு இப்படி இருந்தாலும் ஏதாவது ஒரே ஒரு கிரகம் சிக்காமல் இருக்கும்;ஜோதிட அனுபவத்தில்,இப்படி இருந்தாலும்,அது கால சர்ப்ப தோஷமே.



இப்படிப்பட்ட கிரக நிலையில் பிறந்தவர்கள்,31 வயது வரையிலும் யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற அணுகுமுறை தெரியாது.32 முதல் 36 வயதிலிருந்துதான் இந்த அணுகுமுறை வளரும்;அதன் பிறகே இவர்களுக்கு வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படத்துவங்கும்.



லக்னத்துக்கு 2 இல் ராகு அல்லது கேது,லக்னத்துக்கு 8 இல் கேது அல்லது இராகு,இராகு திசை அல்லது கேது திசை இருப்பவர்களும் பின்வரும் பரிகார வழிபாடு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.



தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் கி.பி.1881 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நாகநாத சிவன் கோவில் இருக்கிறது.இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷப்பரிகாரத்திற்காக ரிஷபாருடராகக் காட்சி தருகின்றார்கள் ராகுவும் கேதுவும்.

புதுக்கோட்டையிலிருந்து நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் பேரையூர் இருக்கிறது.



இந்த திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும்.நீராடியபிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி அங்கேயே போட வேண்டும்.தலைக்கு மேல் ஈர ஆடைகளைக் கொண்டு வரக்கூடாது;அதன்பிறகு அக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து,பரிகாரம் செய்ய வேண்டும்.இதனால்,தோஷம் நீங்கிவிடும்.


சொன்னவர்:திரு.சிவ.சேதுபாண்டியன் ஐயா அவர்கள்


முகவரி:நாக நாத சிவன் கோவில்,பேரையூர்,சிவபுரம் (வழி)622422.ஓதுவார் கமிட்டி செல்:9443999037.

போன்:04333 277497.

Comments