FKart PrmotionalBanners

ரத்த நோய்கள் விலக ஸ்லோகம்

ரத்த நோய்கள் விலக ஸ்லோகம்


மஹாதேவாஜ்ஜாதம் சரவணபவம் மந்த்ரஸரபம்
மஹத்தத்வாநந்தம் பரமலஹரீம் மந்த்ரமதுரம்
மஹாதேவாதீதம் ஸுரகணயுதம் மந்த்ரவரதம்
குஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம்
        - ஸுப்ரமண்ய பஞ்சக ஸ்தோத்திரம்

பொதுப் பொருள்: மகாதேவனிடமிருந்து உண்டானவரே, சரவணப் பொய்கையில் அவதரித்தவரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். மந்திரங்களுக்கு மூலமானவராக விளங்குபவரே, சிறந்த தத்துவமாகத் திகழ்பவரே, ஆனந்த வடிவினரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். பரம்பொருளாகத் திகழ்பவரே, மதுரமான மந்திரவடிவாய் அருள்பவரே, மகாதேவனுக்கும் மேற்பட்டவரும் தேவர்களால் போற்றப்படுபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம். உம்மைத் துதிப்போருக்கு, கோரிய வரமருளும் தயாபரனே, வள்ளியின் மணாளரே, கழுகுமலையில் வாசம் செய்யும் குகனே, உம்மை என் இதயக்குகையில் வைத்து தியானிக்கிறேன்.

(தைக்கிருத்திகை (1.2.2012) அன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப்பெருமான் அருளால் வேண்டிய பொருள் விரைவில் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.)

Comments