FKart PrmotionalBanners

நம்ம வீட்லேயே ..நலம் தரும் ..! நல்லதொரு புனித தீர்த்தம் ...!!

நம்ம வீட்லேயே ..நலம் தரும் ..!
நல்லதொரு புனித தீர்த்தம் ...!!
நாம் வீட்டிலேயே - செய்து - உண்டு - பயன் பெறக் கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது ஆகும்.
புனித தீர்த்தம்:
1 - ஏலம்,
2 - இலவங்கம்,
3 - வால்மிளகு,
4 - ஜாதிப்பத்திரி,
5 - பச்சைக் கற்பூரம் இவைகளில்
முதல் நான்கும், வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு எடுத்துக் கொள்ளவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை டப்பாவில் அடைத்து பூஜை அறையில் வைத்து கொள்ளவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி (மூன்று விரல் அளவு ) அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்.
கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும்,
நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும்,
இரத்தம் சுத்தியாகும்.
பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும்.
இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது கை கண்ட நம் பாரம்பரிய அரிய முறையாகும்.

Comments

Popular Posts