FKart PrmotionalBanners

புற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் !!!

புற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் !!!
போஸ்னியாவில் வாழும் பெண் ஹெர்ஜெகோவினா என்பவர் எவ்வாறு தனது புற்றுநோயில் இருந்து விடுபட்டார் எனும் ரகசியத்தை இப்பொழுது புற்று நோயால் பாதிக்கப்பட்ட எல்லாவருக்கும் பரிந்துரைத்து வருகிறார். எளிதாக தயார் பண்ணக்கூடிய மருந்து நமது சித்த மருத்துவத்தில் காலம்காலமாக சொல்லப்பட்டு வரும் இஞ்சி காயகல்பம்தான்.
இவருக்கு நாளமில்லா சுரப்பிகளில் புற்றுநோய் தாக்கி மூன்று வாரங்கள் மருத்துவ மனையில் மெசின்களின் உதவியோடு வாழ்க்கையை ஓட்டவேண்டி வந்தது. இதன் பிறகு தானாக இயற்கை முறையில் பாரம்பரிய மருந்தை முயற்ச்சிக்கலாமே என்று கீழே சொன்ன மருந்தை செய்து சாப்பிட்டார்.
கெமொதெரப்பி மற்றும் அறுவைசிகிச்சை இல்லாமல் மூன்று நாட்களில் தன்னுடைய உடலில் முன்னேற்றம் அடைவதை கண்டு மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்து இந்த மருந்தை தொடர்ந்தார். நாற்பது நாட்களில் நல்ல முன்னேற்றம் கண்ட அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கும் செய்முறையை வெளிப்படுத்தினார்.
செய்முறை:
· 2 பெரிய இஞ்சி துண்டுகள்
· 1 கிலோ இயற்கை தேன்

இஞ்சியை வேர் நீக்கி மிகவும் சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும் அல்லது மிக்சியில் இட்டு பொடித்து கொள்ளவும். இந்த இஞ்சியை தேனில் இட்டு கலந்து கண்ணாடி ஜாடியில் வைத்து கொள்ளவும்.
சாப்பிடும் முறை:
தினமும் நான்கு ஸ்பூன்கள் ஒரு நாளில் சாப்பிடவும். முக்கியமாக கவனிக்க வேண்டியது - செராமிக், மரம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை மட்டும் பயன்படுத்தவும். ஒரு போதும் உலோக கரண்டிகளை உபயோகபடுத்த வேண்டாம்.
இதே மருந்துதான் நமது பராம்பரிய சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆயுள் பெருகவும், அழகு பெறவும்…தேனில் ஊறிய ‘காயகல்ப இஞ்சி’ இதன் செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.
இஞ்சியை சுத்தம் செய்து, மேல்தோலை சீவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு, சுத்தமான தேன் 150 கிராம் விட்டு, அதனை, நான்கு நாள் கழித்துத் தினம்காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து, 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டு விடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும், அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே!
இஞ்சி வேறு எந்த முறைகளில் மருந்தாகின்றது என்று பார்ப்போம்:
ஆங்கில் மருத்துவத்தில இஞ்சியை ரசாயன முறைப்படி சாறு பிழிந்து, அதை மதுசாரத்துடன் கலந்து, ஜிஞ்ஜர்பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து, அதை மிக்சர்களில் கலந்து செரிமாணத்துக்குகொடுக்கின்றனர்.
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு, அரை அவுன்ஸ் வீதம் கொடுத்துவர,ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் நீங்கும். இந்த முறையில், வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல்,இரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து, சர்க்கரைப்பாகுடன் பதப்படுத்தி தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து,இரைப்பு நோய் தொல்லை வரும்போது, மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 3, மிளகு 10இவைகளை நசுக்கி, இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாக சுண்ட வைத்து,வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாச காசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லைகொடுக்கும்போதும், இந்தக் கஷாயத்தை காலை மாலை என நோய் தீரும் வரை கொடுக்கலாம்.(இதில் பூ மூன்றும், மிளகு 10 மட்டும்தான்; எடை கணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர், 20 கிராம் கற்கண்டு தூள் சேர்த்து, அதனுடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து, அரைக்கால் படி பசும்பாலில் கலந்து,காலையில் சாப்பிட்டு வர, பித்த ரோகங்கள்,பித்தம் சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவை தடுத்து நிறுத்தி,களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவது நிற்கும். எரி குன்மம் ஆஸ்துமா,இளைப்பு, மயக்கம், இருமல், வாய்வு குடைச்சல்,வலிகளும் நீங்கும் சந்தேகமில்லை.
செலவில்லாத இந்த மருந்துகளை முயற்ச்சித்து பார்க்கலாமே.

Comments

Popular Posts