FKart PrmotionalBanners

இதோ மிகச் சிறந்த எளிய பரிகாரங்கள் ......

இதோ மிகச் சிறந்த எளிய பரிகாரங்கள் ......


          மனிதர்களுக்கு  ஏற்படும்  கஷ்டங்களுக்கு கர்மவினையே 
காரணம்  என நம் மதம் கூறுகிறது.இதனால்  பரிகாரத்தினால் 
மட்டுமே எதிர் மறையான பலன்களை குறைக்க முடியும் 
என்று மக்கள் ஆயிர கணக்கில் பணத்தை செலவு செய்து 
அதில் நிம்மதியை தேடுகிறார்கள்.
ஒரு சிலர்போலி சாமியார்களிடம் சென்று ஏமாறுகின்றனர். 
ஒரு சிலர் போலி ஜோதிடர்களிடம்  சென்று ஏமாறுகின்றனர். 
     பரிகாரம் என்றால் பொதுவாக ஞாபகத்திற்கு வருவது 
கோயில்களுக்குச் செல்வது,அர்ச்சனை செய்வது மற்றும் 
அபிஷேக ஆராதனைகள் தான்.
        எனது நட்சத்திரம் திருவோணம்,எனது மனைவி 
நட்சத்திரம் கன்னி.நாங்கள்  செய்து பார்த்து உணர்ந்து 
முழுமையாக  பலன் அடைந்த பிறகே இதை உங்களின் 
பார்வைக்காக  இங்கே தரப் படுகிறது. 
      இந்தப்  பரிகாரத்தின்படி  நாம்  புற்றுக்கள் உள்ள 
ஆலயங்களுக்குச் சென்று  நம்மால் முடிந்த அளவு
தீபமேற்றிஇதில் இருக்கும் எளிய மந்த்ரத்தை உளமார
சொல்லி புற்றுக்கு பால் ஊற்ற வேண்டும். 
          முதலில் வினைகளைப் போக்கும்  விநாயகருக்கு 
வணக்கம் செலுத்துங்கள்.
       இனி  நட்சத்திரங்களின் வரிசைப்படி ........

1.அஸ்வினி 
     மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சரஸ்வதி.
சரஸ்வதி காயத்ரி சொல்லலாம். 
     புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  சர்ப்பரிகன்யாய  நமக "
          நாம் இருக்கும் திசைக்கு கிழக்கு திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு புதன்கிழமை  தோறும்  
7 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
             இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக  மாங்கல்ய தோஷம்  நிவர்த்தியாகும்.
2.பரணி 
     மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  துர்கா.
 துர்கை காயத்ரி சொல்லலாம்.   
      புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய
 மந்த்ரம்  " ஓம் வாசுகியை நமக "
நாம் இருக்கும் திசைக்கு மேற்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு  வெள்ளிகிழமை தோறும்
 6 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
          இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக பெண்களுக்கு மாதவிடாய்  
கோளாறுகள் தீரும், ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான 
நோய்கள்  தீரும் .
3.கிருத்திகை 
      மனதில் வணங்க வேண்டிய  கடவுள் (அக்னி)
சூரியன். சூரிய காயத்ரி சொல்லலாம்.  
           புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  தட்சகன்யாய நமக "
    நாம் இருக்கும் திசைக்கு தெற்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு  ஞாயிற்றுக்கிழமை 
தோறும் 10 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
 இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக பெண்களுக்கு தடைபட்ட மாதவிடாய்,
கர்ப்பப்பை கோளாறுகள் தீரும்.வியாதிகள்  தோன்றாமல் 
தடுக்கும்.
4 .ரோகினி
         மனதில் வணங்க வேண்டிய  கடவுள் பிரம்மா.
பிரம்மாவின் காயத்ரி சொல்லலாம்.
       புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் சங்கபாலன்யாய நமக "
           நாம் இருக்கும் திசைக்கு வடக்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   திங்கட்கிழமை 
தோறும் 2 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக கணவன் மனைவிக்கு இடையே 
உள்ள பிரச்சினை தீரும்.பகையாளிகள் நண்பர்களாக
மாறுவார்கள்.
5.மிருகசீரிஷம் 
        மனதில் வணங்க வேண்டிய  கடவுள் சந்திரன்.
  சந்த்ரனுடைய   காயத்ரி சொல்லலாம். 
 புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய
 மந்த்ரம் " ஓம் மதிமதனாய நமக "
   நாம் இருக்கும் திசைக்கு தென்கிழக்கு   திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   திங்கட்கிழமை 
தோறும் 2 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும், முக்கியமாக கணவனால் மனைவிக்கு ஏற்படும் 
துன்பம் நீங்கும்.மனைவியால் கணவனுக்கு ஏற்படும் 
துன்பம் நீங்கும்.
6 .திருவாதிரை  
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் ருத்ரன்.
சிவ காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் கார்கோடகன்யாய நமக "
   நாம் இருக்கும் திசைக்கு வடகிழக்கு  திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   சனிக்கிழமை அல்லது 
செவ்வாய்க்கிழமை  தோறும் 4  வாரங்கள் தொடர்ந்து  
பால் ஊற்ற வேண்டும்.இதனால் ஏற்படும் பலன் எல்லா 
பிரச்சினைகளும்  தீரும், முக்கியமாக குழந்தைகள் மற்றும் 
பிள்ளைகள் நோய் தீரும்.
7 . புனர்பூசம்
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் தேவர்கள் ( குரு).
 குரு காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் தனஞ்ஜயன்யாய நமக "
  நாம் இருக்கும் திசைக்கு வடமேற்கு   திசையில் உள்ள
கோயிலில் இருக்கும் புற்றுக்கு   வியாழக்கிழமை  
தோறும் 3   வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும்.
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும்  தீரும்,
முக்கியமாக பிள்ளைகளின்  கடமைகள் மற்றும் தடைபட்ட 
காரியங்கள்  நிறைவேறும்.
8 . பூசம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  வியாழன் (குரு).
குரு காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் குளிகன்யாய நமக "
   எந்த கோயிலிலும் உள்ள அரச மரத்தடி புற்றுக்கு 
வியாழக்கிழமை  தோறும் 3   வாரங்களும் பின் 
திங்கட்கிழமை தோறும்  2  வாரங்களும்  தொடர்ந்து  
பால் ஊற்ற வேண்டும். இதனால் ஏற்படும் பலன் 
எல்லா பிரச்சினைகளும்  தீரும்,முக்கியமாக பங்காளிப் 
பிரச்சினைகளில் ஆண், பெண் இருவரால் ஏற்படும் 
சண்டைகள் தீரும்.
9.ஆயில்யம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் ஆதிஷேசன் 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம் ஆதிஷேசன்யாய நமக "
எந்த கோயிலிலும் உள்ள அரச மரத்தடி புற்றுக்கு 
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை  தோறும் 
6  வாரங்களும்  தொடர்ந்து  பால் ஊற்ற வேண்டும். 
இதனால் ஏற்படும் பலன் எல்லா பிரச்சினைகளும் 
தீரும்,முக்கியமாக கூட்டுத்தொழில் சிறக்கும்.
தொழிலில் ஏற்படும் பிரச்சினை தீரும்.உத்தியோக 
உயர்வு கிட்டும். பங்காளி சண்டை தீரும். 
10.மகம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சுக்கிரன். 
சுக்கிரன் காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  பதுமன்யாய  நமக "
வில்வ மரத்தடி புற்றுக்கு  ஞாயிற்றுக்கிழமை 
தோறும் 6 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற 
வேண்டும்.
சித்ரகுப்தருக்கு  7 வது   வாரம் பாலாபிஷேகம் 
செய்ய வேண்டும் .
கணவன் மனைவி பிரிந்து  இருந்தால்  மனம் 
திருந்தி  ஒன்று  சேர்வர்.

11.பூரம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள் பார்வதி .
 பார்வதி காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  மகாப் பதுமன்யாய  நமக "
ஆல மரத்தடி புற்றுக்கு வெள்ளிக்கிழமை 
தோறும் 6 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற 
வேண்டும்.
திருமண தடைகள் நீங்கும் . கன்னிப் பெண்களுக்கு 
ஏற்படும்  அனைத்து  தோஷங்களும்  விலகும். 
12.உத்திரம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சிவன்   
அவதாரம் செய்த தலங்கள்
 சிவன் காயத்ரி சொல்லலாம்.
 புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  சாமதத்தன்யாய  நமக
வேப்ப மரத்தடி  புற்றுக்கு  
ஞாயிற்றுக்கிழமை தோறும் 5 வாரங்கள் மற்றும்
புதன்கிழமை  தோறும் 5 வாரங்களும்  தொடர்ந்து
பால் ஊற்ற வேண்டும்.
இதனால்  அம்மை  நோய்  நீங்கும் .மருத்துவர்கள்
கண்டறியாத  நோய்கள்  கூட நீங்கும்.

13.அஸ்தம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சூரியன்.
சூரிய  காயத்ரி சொல்லலாம்.சூரியனார் கோயில் 
சென்று  வழிபடலாம் . 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  வாஸ்மருதம்யாய நமக
 அம்மன் கோயில்  புற்றுக்கு 
புதன்கிழமை  தோறும் 5 வாரங்களும்  தொடர்ந்து
திங்கட்கிழமை 1 வாரமும்  பால் ஊற்ற வேண்டும்.
 தோல் வியாதி மற்றும் வெண் குஷ்டம்  குணமாகும்.  

14.சித்திரை 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  விஸ்வகர்மா.
விஸ்வகர்மா  காயத்ரி சொல்லலாம்.
 புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  விஜயன்யாய  நமக ".
முருகன் கோயில்  புற்றுக்கு  செவ்வாய் கிழமை
தோறும் 9 வாரங்கள்  தொடர்ந்து
பால் ஊற்ற வேண்டும்.சிவப்பு மலர்களால் 
அர்ச்சிக்க இன்னும் சிறப்பு.
சொத்துக்களில் உள்ள தடைகள் அகலும்.
15. சுவாதி
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  லஷ்மி.
லஷ்மி காயத்ரி சொல்லலாம்.                 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  லவணம்யாய நமக ".
முனீஸ்வரர் கோயில்  புற்றுக்கு வெள்ளிக்கிழமை 
தோறும் 7 வாரங்கள் தொடர்ந்து  பால் ஊற்ற 
வேண்டும்.
தீயகாற்று  சேஷ்டைகள் பில்லி சூனியத்தால்
ஏற்படும் வியாதிகள் நீங்கும்.

16.விசாகம்  
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  சுப்ரமணியர்.
 சுப்ரமணியர் காயத்ரி சொல்லலாம். 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  சஷ்டிகன்யாய  நமக ".
எல்லா  கோயிலின் குளத்தருகே  உள்ள
புற்றுக்கு  செவ்வாய் கிழமை தோறும்
9 வாரங்கள்  தொடர்ந்து    பால் ஊற்ற  வேண்டும்.
நீண்டநாள் கிடைக்காத பணி கிடைக்கும்.

17. அனுஷம் 
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  வாயு பகவான்.
சிவத்தலங்களில் இருப்பார்.
 வாயு பகவான் காயத்ரி சொல்லலாம்.  
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  விமலன்யாய  நமக ".
எல்லை அம்மன் கோயில் அருகே    உள்ள
புற்றுக்கு  செவ்வாய் கிழமை
9 வாரங்களும்  சனிக்கிழமை 1வாரமும் 
   தொடர்ந்து பால் ஊற்ற  வேண்டும்.
முடக்கு வாதம்  வாயு கோளாறுகள்  நீங்கும். 

18. கேட்டை  
மனதில் வணங்க வேண்டிய  கடவுள்  தேவேந்திரன்.

சிவத்தலங்களில் இருப்பார்.
 இந்திர காயத்ரி சொல்லலாம். 
புற்றுக்கு பால் ஊற்றும் பொது  சொல்ல வேண்டிய 
மந்த்ரம் " ஓம்  சஞ்சன்யாய  நமக ".
மலைமேல் உள்ள   புற்றுக்கு 
புதன்கிழமை  தோறும் 5 வாரங்களும்  தொடர்ந்து
செவ்வாய்கிழமை 1 வாரமும்  பால் ஊற்ற வேண்டும்.
பெண்களின் ஏக்கங்களும் , கவலைகளும்  உடனே 
தீரும்.  

Comments