சுக்கிரன் மட்டும்தான் சுகவாழ்வை தருவாரா?
|
பொதுவாக ஒருவருக்கு செல்வம், செல்வாக்கு, பதவி, பட்டம் என்று பேசும்பொழுது ‘அவருக்கு என்னப்பா சுக்கிரதசை அடிக்குது; அதனால மண்ணைத் தொட்டாலும் பொன்னாகுது’ என்று சொல்வார்கள். இந்த எண்ணம் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை வேரூன்றி இருக்கிறது. ஆனால் சுக்கிரனால் ம ட்டும்தான் ராஜயோகம் கொடுக்க முடியுமா? மற்ற கிரகங்களால் தரமுடியாதா என்ற கேள்வி எழலாம். உண்மைதான், சுக்கிர தசை எல்லோருக்கும் ராஜயோகத்தை தராது. மேலும் சுக்கிர தசையில் பல இன்னல்களும், இடையூறுகளும், துன்பங்களும், அவமானங்களும் ஏற்படும்.
ஒரு சில குறிப்பிட்ட லக்னங்களுக்கு மட்டுமே சுக்கிரன் போகத்தைத் தருவார். அதுவும் அவர் பலம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால்தான் முழுமையான ராஜயோக பலன்களை அனுபவிக்க முடியும். சுக்கிரன் எல்லா ஜாதகங்களுக்கும் ராஜயோக பலன்களைத் தரமாட்டார். சுக போகங்களுக்குரிய கிரகம் சுக்கிரன் என்பதால் அவரால் தான் ராஜயோகம் தரமுடியும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது.
ஒவ்வொரு லக்னத்திற்கும் யோகத்தைத் தரக்கூடிய கிரகங்கள் உண்டு. அதே நேரத்தில் கிரக சேர்க்கை மூலமும் யோகம் வரும். முக்கியமாக யோகத்தைத் தரக்கூடிய தசைகள் வந்தால்தான் நமக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு லக்னத்திற்கும் யோகத்தைத் தரக்கூடிய கிரகங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
லக்னம் கிரக தசைகள்
மேஷம் செவ்வாய். சூரியன், குரு
ரிஷபம் சுக்கிரன், புதன், சனி
மிதுனம் புதன், சுக்கிரன், சனி
கடகம் சந்திரன், செவ்வாய், குரு
சிம்மம் சூரியன், குரு, செவ்வாய்
கன்னி புதன், சுக்கிரன், சனி
துலாம் சுக்கிரன், சனி, புதன்
விருச்சிகம் செவ்வாய், குரு, சந்திரன்
தனுசு குரு, செவ்வாய், சூரியன்
மகரம் சனி, சுக்கிரன், புதன்
கும்பம் சனி, புதன், சுக்கிரன்
மீனம் குரு, சந்திரன், செவ்வாய்
ஆக எல்லா கிரகங்களும் ராஜயோக பலன்களை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராகு, கேதுகூட அவர்கள் சேருகின்ற, இருக்கின்ற ஸ்தானத் தின் பலத்திற்கேற்ப யோகத்தைத் தருவார்கள். இத்துடன் ஜாதகத்தில் ஏற்படுகின்ற கிரக சேர்க்கை யோகமும் ஒரு காரணமாகும். ஆகையால் சுக யோகங்க¬ ளத் தரும் வல்லமை சுக்கிரனுக்கு மட்டும் அல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் உரியது என்பதே சாஸ்திரம் நமக்கு விளக்கும் உண்மையாகும்.
Comments
Post a Comment