பணம் கொத்திப் பறவைகள்
பணம் கொத்திப் பறவைகள்
இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.
நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,00,000,000,0000) இந்திய ரூபாய்கள். பெரும்பாலும் கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.
இதுமட்டுமா நாட்டிலுள்ள பல ஸ்ரீகளின், பாபாக்களின், சுவாமிஜிக்களின், போதகர்களின் இரகசிய அறைகளில் இருக்கும் பணக்கட்டுகள், தங்கக்கட்டிகள் எல்லாம் இன்னும் கோடிக் கோடி பெருமானம் வரும்.யாருக்கும் பயனின்றி சேர்த்தார் நீத்தார் பின் ஏதோ சில திருடர்கள் திருடிப்போய் மீண்டும் சுவிசில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
இன்னும் அதிஷ்டமாக நம்முன்னோர்கள் முன்பு சேர்த்துவைத்திருந்த பொக்கிஷங்களும் இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றன.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் தோண்ட தோண்ட தங்கக் குடங்களும் வைரங்களும் வைடூரியங்களும் எடுக்க்ப்படுகின்றன. மொத்த ஆறு அறைகளில் மூன்று அறைகளில் மட்டும் 400 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள். ஆறு அறைகளையும் திறந்து மதிப்பிட்டால் 1000 கோடியையும் தாண்டும் என்கின்றார்கள்.யார் கொத்திக்கொண்டு போவார்களோ?
இந்திய மாலுமிகளை மீட்க பாகிஸ்தானிய படை வரவேண்டியிருக்கின்றது. இந்திய மீனவர்களை சாகடி அடிக்கிறான் வளரும் வல்லரசுக்கு கேட்க நாதியில்லை. கடமையை விட்டு விட்டு பணம் பணம் என்று அலைகின்றதே இந்தியா. மனிதனே! அதிகமாய்ப்போனால் நூறு ஆண்டுகள் தான் வாழ்வாய். எத்தனை கோடிகள் தான்வேண்டும் உனக்கு?
Comments
Post a Comment