FKart PrmotionalBanners

அதிஷ்டம் தரும் மரங்கள்

 அதிஷ்டம் தரும் மரங்கள்


---------------------------------------------

பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி

விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள்

நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள்

கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்..

அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும்

வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை

கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம

தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில

மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது..

உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள்

தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை

ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த

வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை,

பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம்,

குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாம

ி மலை) தென்மேற்குப் பகுதியில்

சூரியக்கதிர்கள் படும் இடத்தில்

நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது

பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில்

நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால்

நவதானியங்களை ஊற வைத்த நீரை

அச்செடிக்கு விட்டு ஊறிய

நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு

உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,

அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின்

வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின்

பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து

தோஷங்களையும் அந்த மரக்கன்று

ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கு

ம்போது,உரியவரின் வாழ்க்கையும்

செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள்

நீங்கியிருக்கும்.கர்மவினைகளை

வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி

ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்

குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்

பார்ப்போம்:

அஸ்வினி

1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)

2 ம் பாதம் - மகிழம்

3 ம் பாதம் - பாதாம்

4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி

1 ம் பாதம் - அத்தி

2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு

3 ம் பாதம் - விளா

4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை

1 ம் பாதம் - நெல்லி

2 ம் பாதம் - மணிபுங்கம்

3 ம் பாதம் - வெண் தேக்கு

4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி

1 ம் பாதம் - நாவல்

2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை

3 ம் பாதம் - மந்தாரை

4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்

1 ம் பாதம் - கருங்காலி

2 ம் பாதம் - ஆச்சா

3 ம் பாதம் - வேம்பு

4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை

1 ம் பாதம் - செங்கருங்காலி

2 ம் பாதம் - வெள்ளை

3 ம் பாதம் - வெள்ளெருக்கு

4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்

1 ம் பாதம் - மூங்கில்

2 ம் பாதம் - மலைவேம்பு

3 ம் பாதம் - அடப்பமரம்

4 ம் பாதம் - நெல்லி

பூசம்

1 ம் பாதம் - அரசு

2 ம் பாதம் - ஆச்சா

3 ம் பாதம் - இருள்

4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்

1 ம் பாதம் - புன்னை

2 ம் பாதம் - முசுக்கட்டை

3 ம் பாதம் - இலந்தை

4 ம் பாதம் - பலா

மகம்

1 ம் பாதம் - ஆலமரம்

2 ம் பாதம் - முத்திலா மரம்

3 ம் பாதம் - இலுப்பை

4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - வாகை

3 ம் பாதம் - ருத்திராட்சம்

4 ம் பாதம் - பலா

உத்திரம்

1 ம் பாதம் - ஆலசி

2 ம் பாதம் - வாதநாராயணன்

3 ம் பாதம் - எட்டி

4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்

1 ம் பாதம் - ஆத்தி

2 ம் பாதம் - தென்னை

3 ம் பாதம் - ஓதியன்

4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை

1 ம் பாதம் - வில்வம்

2 ம் பாதம் - புரசு

3 ம் பாதம் - கொடுக்காபுளி

4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி

1 ம் பாதம் - மருது

2 ம் பாதம் - புளி

3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை

4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்

1 ம் பாதம் - விளா

2 ம் பாதம் - சிம்சுபா

3 ம் பாதம் - பூவன்

4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்

1 ம் பாதம் - மகிழம்

2 ம் பாதம் - பூமருது

3 ம் பாதம் - கொங்கு

4 ம் பாதம் - தேக்கு

கேட்டை

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - பூவரசு

3 ம் பாதம் - அரசு

4 ம் பாதம் - வேம்பு

மூலம்

1 ம் பாதம் - மராமரம்

2 ம் பாதம் - பெரு

3 ம் பாதம் - செண்பக மரம்

4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்

1 ம் பாதம் - வஞ்சி

2 ம் பாதம் - கடற்கொஞ்சி

3 ம் பாதம் - சந்தானம்

4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - கடுக்காய்

3 ம் பாதம் - சாரப்பருப்பு

4 ம் பாதம் - தாளை

திருவோணம்

1 ம் பாதம் - வெள்ளெருக்கு

2 ம் பாதம் - கருங்காலி

3 ம் பாதம் - சிறுநாகப்பூ

4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்

1 ம் பாதம் - வன்னி

2 ம் பாதம் - கருவேல்

3 ம் பாதம் - சீத்தா

4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்

1 ம் பாதம் - கடம்பு

2 ம் பாதம் - பரம்பை

3 ம் பாதம் - ராம்சீதா

4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி

1 ம் பாதம் - தேமா

2 ம் பாதம் - குங்கிலியம்

3 ம் பாதம் - சுந்தரவேம்பு

4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி

1 ம் பாதம் - வேம்பு

2 ம் பாதம் - குல்மோகர்

3 ம் பாதம் - சேராங்கொட்டை

4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி

1 ம் பாதம் - பனை

2 ம் பாதம் - தங்க அரளி

3 ம் பாதம் - செஞ்சந்தனம்

4 ம் பாதம் - மஞ்சபலா

மகிழமரம்: 

இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும்.

கொன்றை மரம்: 

இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

குறுந்த மரம்: 

இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.

வெள்ளை மன்தாரை: 

குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும்.

சம்தானக மரம்: 

நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள்.

பும்சிக மரம்: 

சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த விசேட தெய்வ விருட்சத்தைப் பூஜை செய்தால் மலடியும் குழந்தை பெறுவாள் என்று கூறப்படுகிறது. பும்சிகம் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில்தான் உண்டு. இதை ஆராதனைகள் செய்து இதன்கீழ் யாகம் நடத்தி வழிபட வாரிசு ஒன்றை நிச்சயம் பெறலாம்.

அரிசந்தன மரம்:

இந்த விருட்சத்தை தோட்டத்தில் வளர்ப்போ ருக்கு தீமைகள் நெருங்கி வந்தாலும், அருகில் வந்தபின் மறைந்துவிடும்.

பன்னீர்பூ மரம்: 

இந்த மரத்தை வீட்டில் வணங்குவோருக்கு வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதை திருச்செந்தூர் கோவில் மரம் என்றும் அழைப்பார்கள்.

பெருந்தும்பை: 

தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.

ஜலம்தரா மரம்: 

தொட்டால் சிணுங்கி செடிக்கு இப்பெயர் உண்டு. இதையும் தனலட்சுமி செடி என்பர். இச்செடி வளரும் இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட அந்த இடம் வளம்பெற்று திகழும்.

குடும்பநலச்செடி: 

வீட்டுத் துளசி மாடத்தருகில் துளசிச் செடியும், ஜலந்தரா என்ற தொட்டால் சிணுங்கி செடியையும் ஒரே அளவில் வைத்துத் தனித் தொட்டியில் வளர்க்க வேண்டும். இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும் .

அகண்ட வில்வம்: 

காளஹஸ்தி கோவில் மரம் என்ற பெயர் உள்ள இதற்கு அதிர்ஷ்ட மரம் என்றும் பெயர் உண்டு. இம்மரத்தைச் செடி பருவத்தில் திங்களன்று பூஜை செய்துவந்தால் வீடு அதிர்ஷ்டகரமாக விளங்கும். சகல சௌகர்யங்களும் கிடைக்கும். பூஜை ஆகமவிதியோடு செய்தால் பலன் கிட்டும்.

விடாத்ழை மரம்:- 

ஆரோக்யமாக வாழவும், நோய்கள் விலகி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வரவேண்டும். இதற்குச் சனீஸ்வர மரம் என்ற பெயரும் இருக்கிறது. சனீஸ்வரனின் 7 1/2 பிடி அர்த்தாட்டம சனி காலத்தில் இவ்விருட்ச பூஜை பலன்தரும்.

திருமண மரம்: 

பின்னை மரம்தான் திருமணப் பேற்றைத் தரும் தெய்வ விருட்சமாக விளங்குகிறது. திருமணம் தடைபடும் ஆண்- பெண்கள் இம்மரத்திற்கு சுபநாளில் பூஜை செய்து அதன்கீழ் மங்கள பூஜைகள் செய்தால் உடனே திருமணக்காலம் வரும்.

கதம்ப மரம்: 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மரம் என்றழைக்கப் படும் இந்த விருட்சம் தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. வெள்ளிக் கிழமைகளில் இந்த மரம் பூஜிக்கத் தகுந்தது.

செல்வ மரம்: 

கருநெல்லி மரத்தைத்தான் செல்வமரம் என்பார்கள். இதை லட்சுமி மரம், (ப்ராஸ் பொடி) என்றும் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இம்மரத்தை இல்லத்தில் வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெருகும்.

சௌபாக்ய மரம்: 

சண்பக மரத்தைத்தான் சௌபாக்ய விருட்சம் என்று அழைக்கிறோம். வெள்ளிக்கிழமை, அஷ்டமி தினங்களில் சௌபாக்ய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு பிரார்த்திக்க குடும்பத்தில் சௌபாக்கிய நிலை உண்டாகும்.

பிராய் மரம்: 

மின்னலைத்தடுக்கும் மரம் என்று இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் ஊரின் பெயர் அப்படி வந்தது.

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள்

அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம்

பெறுங்கள்..

சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக

இருக்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து

விடாதீர்கள்.

நன்றி    - சித்தர்களின் குரல் shiva shangar

Comments