குருப்பெயர்ச்சி பலன்கள் - 2013
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (28.5.13)
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த
யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும்
நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு
பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று
அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.
எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத, அனைத்து கிரகங்களும் நட்பு பெறும்
நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான் அமர்வதால்,
அனைத்து ராசியினருக்கும் மத்திம பலன்களே கிடைக்கும். அதாவது, நற்பலன்கள்
பெறப்போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும். அதேபோல், கெடு
பலன்கள் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள் குறைவாகவே
இருக்கும்.
சமாதான வீட்டில் குரு அமர்ந்தாலும் உலகெங்கும்...
ஆட்சியாளர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு-
செயல்பாடுகளால் சண்டை-சச்சரவுகள் அதிகரிக்கும். வடக்கு மூலைக்கு அதிபதியான
புதனின் வீட்டில் தென்னக கிரகமான குரு அமர்வதால், பூமியில் வடக்குப்
பகுதியில் இருப்பவர்களும், தெற்குப் பகுதியில் வாழ்பவர்களும்
மோதிக்கொள்வார்கள். புதிதாக வானொலி, தொலைக்காட்சி சேனல்களும், நாள், வார,
மாதப் பத்திரிகைகளும் வெளியாகும். 28.5.13 முதல் 12.6.14 வரையிலும்
ஊடகங்களின் காலம் என்றே சொல்லலாம். வி.ஐ.பி-களின் கடந்தகால அந்தரங்க
விஷயங்களும், நிகழ்கால நிழல் சம்பவங்களும் வெளியாகி பரபரப்புகள்
பற்றிக்கொள்ளும். வித்யாகாரகன் புதனின் வீட்டில் குரு அமர்வதால், தேர்வு
முறையில் பல மாற்றங்கள் வரும். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும்
வினாக்கள் அதிகம் இடம்பெறும். கடந்த கால தேர்வு முறை குளறுபடிகள்
கண்டறியப்பட்டு, புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள்
பாதிப்புக்கு உள்ளாகும்.
குரு
5-ஆம் பார்வையால் சனியையும் ராகுவையும் பார்ப்பதால் விலைவாசி ஓரளவு
குறையும். நாட்டில் பணப்புழக்கமும் மக்களின் வருமானமும் குறையும். தங்கம்,
வெள்ளி முதலான ஆபரணங்களின் விலை வீழ்ச்சியுறும் என்றாலும், 19.8.13-க்குப்
பிறகு, அவற்றின் விலை அதிகரிக்கும். பெட்ரோ கெமிக்கல்களின் விலையும்
சரியும். வாகன உற்பத்தி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும், டி.வி.,
ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் மற்றும் செல்ஃபோன்களின் விலையும் குறையும்.
பாடப்புத்தகங்களின் விலை உயரும். ஆங்கில மோகம் அதிகமாகும். ஆசிரியர்
தேர்வு முறை சற்றே எளிதாகும். சாஃப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்புகளும்
ஊதியமும் குறைய வாய்ப்பு உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களில் பலர்
தாய்நாடு திரும்புவர். 2-வதாக திருமணம் புரிவது அதிகரிக்கும்.
புத்திரகாரகன் குரு, பகை கிரகமான புதனின் வீட்டில்
அமர்வதால், கர்ப்பிணிகள் பாதிப்படைவர். குறிப்பாக 7-வது மாதத்தில் இருந்து
பாதிப்புகள் அதிகரிக்கும். பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை உள்ள
குழந்தைகளை புதிய நோய்கள் தாக்கும். குழந்தையின்மை அதிகமாகும்.
பங்குதாரர்களின் ஈகோ பிரச்னையால் பல தொழிற் சாலைகள் விற்பனைக்கு வரும்;
வீழ்ச்சியடையவும் வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம்
இல்லாமையால் பாரம்பரிய குடும்பங்கள் நலிவடையும்.
தனகாரகன் குரு மிதுனத்தில் அமர்கிறார். எனவே, ரிசர்வ்
வங்கி அங்கீகரிக்காத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஏலச்சீட்டு திட்டங்களிலும் சேர வேண்டாம். வங்கிகளில் வாராக் கடன்
அதிகரிக்கும். கடன் பெற்றுவிட்டு, தவணைத் தொகை கட்டாமல் வங்கி
நடவடிக்கைக்கு பலரும் ஆளாவார்கள். கறுப்புப் பணம் அதிகம் பிடிபடும்.
தீவிரவாதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களை நவீனமாகப் பயன்படுத்தி விபத்துகளை
நிகழ்த்துவர். தொலைபேசி, அலைபேசி சேவைக் கட்டணங்கள் குறையும். அ, க, ஹ
(கி,ரி,பி) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஊர்கள், மாவட்டங்கள்,
மாநிலங்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
மேற்கண்ட எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ஆரோக்கியத்திலும் பண
விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அனைத்து மத வழிபாட்டுக் கூடங்களும்
அசுர வேகத்தில் வளரும். வைணவ தலங்கள் பிரசித்தி அடையும். மூச்சுத் திணறல்,
மூளைக் காய்ச்சல், நுரையீரல் அழற்சி, சளித் தொந்தரவு, சிறுநீரகம் மற்றும்
பித்தப்பை கற்களால் அதிகம்பேர் பாதிப்படைவர்.
குருப்பெயர்ச்சியால் தென்மேற்கு பருவ மழை
அதிகரிக்கும். விடியற்காலையில் அதிக மழை பொழியும். பசு-கன்றுகள், பயிர்-
பச்சைகள், தோப்பு-தோட்டங்கள் வளம் அடையும். வன விலங்குகளும்
அபிவிருத்தியாகும். ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். நிலங்களின் கைடு
லைன் வேல்யூவை அரசு குறைக்கும். மின் தட்டுப்பாடு குறையும். புன்செய்
நிலங்கள், நீர் நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும்.
பதுக்கல் தானியங்கள் பிடிபடும். கள்ளப் பணம் தயாரிப்பவர்கள் கையும்
களவுமாகப் பிடிபடுவர். பாரதத்தின் பகை நாட்டு உளவாளிகள், தீவிரவாதிகள்
காவல் துறையினரால் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
மலையாள,
ஹிந்தி மொழியில் தயாராகும் திரைப்படங்கள் பிரபலமாகி விருதுகளைப் பெறும்.
விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவர். எழுத்தாளர்கள்
நலிவடைவார்கள். பாராளுமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிறகு புதிய
கூட்டணி உருவாகி ஆட்சி அமைக்கும். மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு
அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
28.5.13 - 11.6.13 வரை மிருகசீரிடம் 3-ல்
2.6.13 - 25.6.13 வரை மிருகசீரிடம் 4-ல்
26.6.13 - 10.7.13 வரை திருவாதிரை 1-ல்
11.7.13 - 25.7.13 வரை திருவாதிரை 2-ல்
26.7.13 - 9.8.13 வரை திருவாதிரை 3-ல்
10.8.13 - 28.8.13 வரை திருவாதிரை 4-ல்
29.8.13 - 17.9.13 வரை புனர்பூசம் 1-ல்
18.9.13 - 19.10.13 வரை புனர்பூசம் 2-ல்
20.10.13 - 12.11.13 வரை புனர்பூசம் 3-ல்
13.11.13 - 30.11.13 வரை புனர்பூசம் 3-ல் வக்ர நிலை
1.12.13 - 2.1.14 வரை புனர்பூசம் 2-ல் வக்ர நிலை
3.1.14 - 26.1.14 வரை புனர்பூசம் 1-ல் வக்ர நிலை
27.1.14 - 11.3.14 வரை திருவாதிரை 4-ல் வக்ர நிலை
12.3.14 - 12.4.14 வரை திருவாதிரை 4-ல் இயல்பு நிலை
13.4.14 - 6.5.14 வரை புனர்பூசம் 1-ல்
7.5.14 - 25.5.14 வரை புனர்பூசம் 2-ல்
26.5.14 - 12.6.14 வரை புனர்பூசம் 3-ல்
2.6.13 - 25.6.13 வரை மிருகசீரிடம் 4-ல்
26.6.13 - 10.7.13 வரை திருவாதிரை 1-ல்
11.7.13 - 25.7.13 வரை திருவாதிரை 2-ல்
26.7.13 - 9.8.13 வரை திருவாதிரை 3-ல்
10.8.13 - 28.8.13 வரை திருவாதிரை 4-ல்
29.8.13 - 17.9.13 வரை புனர்பூசம் 1-ல்
18.9.13 - 19.10.13 வரை புனர்பூசம் 2-ல்
20.10.13 - 12.11.13 வரை புனர்பூசம் 3-ல்
13.11.13 - 30.11.13 வரை புனர்பூசம் 3-ல் வக்ர நிலை
1.12.13 - 2.1.14 வரை புனர்பூசம் 2-ல் வக்ர நிலை
3.1.14 - 26.1.14 வரை புனர்பூசம் 1-ல் வக்ர நிலை
27.1.14 - 11.3.14 வரை திருவாதிரை 4-ல் வக்ர நிலை
12.3.14 - 12.4.14 வரை திருவாதிரை 4-ல் இயல்பு நிலை
13.4.14 - 6.5.14 வரை புனர்பூசம் 1-ல்
7.5.14 - 25.5.14 வரை புனர்பூசம் 2-ல்
26.5.14 - 12.6.14 வரை புனர்பூசம் 3-ல்
பரிகாரம்:
குரு பகவான் சுய கௌரவம், தன்மானம், விடாமுயற்சி,
கல்வி, நுண்ணறிவு மற்றும் ஊடகங்களுக்கு உரிய கிரகமான புதனின் வீட்டில்
அமர்கிறார். எனவே, மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுய முயற்சியிலும்
உழைப்பிலும் முன்னேறப் பாருங்கள். பண வசதி இல்லாதவர்களின் உயர் கல்விக்கு
உதவுங்கள்; குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
சொல்வன்மை
மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் இப்போது 3-ஆம் வீட்டுக்கு அடியெடுத்து
வைக்கிறார். 28.5.13 முதல் 12.6.14 வரை, உங்களின் விரய-பாக்கிய
ஸ்தானாதிபதியான குரு, 3-ல் மறைவதால், எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது
நல்லது. எடுத்த காரியங்களை முடிக்க, அதிக முயற்சி தேவை. முக்கிய அலுவல்களை
மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தினர் கருத்துக்களை அமைதியாக
ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் வந்தாலும் சேமிக்க இயலாமல் செலவுகள் துரத்தும்.
வசதி-வாய்ப்புகளைக் கண்டு தவறானவர்களுடன் நட்புகொள்ள வேண்டாம். உணவுக்
கட்டுப்பாடு, மருந்து உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை அவசியம்.
உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை
வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பி-கள் நட்பாவர். தம்பதிக்குள்
சச்சரவுகள் எழுந்தாலும் அந்நியோன்யம் குறையாது. குரு உங்களின் 9-ஆம்
வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. கடன் கட்டுக்குள் வரும். தந்தையின்
உடல் நலன் சீராகும். அவருடனான கருத்துமோதல் விலகும். வழக்கு நெருக்கடிகள்
நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு 11-ஆம் வீட்டைப்
பார்ப்பதால், கல்வியாளர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். பதவிகள் தேடி வரும்.
ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் மிருகசீரிட
நட்சத்திரத்தில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு
உண்டு. தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபம்
தரும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஈகோ பிரச்னையால்
தம்பதிக்குள் பிரிவு, மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை வந்துபோகும்.
29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை,
உங்களின் பாக்கிய-விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குரு செல்கிறார்.
நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலைக்கான முயற்சிக்கு நல்ல
பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசத்திலும், 27.1.14
முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் குரு வக்ர கதியில் செல்வதால்,
வருமானம் உயரும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும். மகனுக்கு நல்ல
வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வீடு கட்டி
கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்பட
வேண்டும். புது சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை
விரிவுபடுத்துவது, மாற்றுவது குறித்த முயற்சிகளில் இறங்குவீர்கள்.
பங்குதாரர்கள், தங்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவர். உணவு, டிராவல்ஸ்,
பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற இலக்கை அடைய
முடியாமல் ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். பணிச்சுமை
அதிகரித்தாலும் சளைக் காமல் செய்து முடிப்பது நல்லது. விரும்பத்தகாத
இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு சற்று தாமதமாகக்
கிடைக்கும்.
கன்னிப்பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல
வரன் அமையும். மாணவர்கள், கூடா நட்பைத் தவிர்க்கவும். விரும்பிய கல்வி
நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத் துறையினர்,
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள் சகாக்களிடம்
அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பணிச் சுமையை தந்தாலும், மனப்பக்குவத்தால் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பழநி
மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை மகம் நட்சத்திரம் நடைபெறும்
நாளில் சென்று தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள்.
குருவருள் கூடி வரும்.
உதாரணப்
புருஷராக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14
வரையிலும் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ல் அமர்வதால்,
எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால்
வீட்டில் அமைதி தவழும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். பிரிந்த தம்பதி
ஒன்றுசேர்வர். வீண் பதற்றம், பயம் நீங்கும். பெரிய நோய் இருப்பது போன்ற
பிரமை நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய
ஆவணங்கள் கிடைக் கும். எதிர்மறை எண்ணங்கள், கூடா நட்பு விலகும். பேச்சில்
கனிவு பிறக்கும்.
குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகள்
அடங்கும். நல்லவர்களது நட்பும், ஆலோசனைகளும் புதிய பாதையில் உங்களைப்
பயணிக்க வைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
சோர்வு நீங்கும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால் மூச்சுத் திணறல், சளித்
தொந்தரவு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 10-வது
வீட்டையும் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். தன்னார்வ தொண்டு
நிறுவனங்களில் பதவி வாய்க்கும். வழக்கு சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும் உங்களின் சப்தம - விரயாதிபதியான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்கிறார். உங்களின்
பலவீனத்தை சரிசெய்வீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாமனார்- மாமியார் உதவுவர். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம்,
பேச்சு வார்த்தையால் சுமுகமாகும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். மறைமுக எதிரிகளை
வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். காரியங்கள்
கைகூடும். சொத்து சேரும்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின்
அஷ்டம-லாபாதிபதியான குரு, தமது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்
வேலை அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். புது பொறுப்புகள்-
பதவிகளை ஏற்க வேண்டாம். சிலர், உங்கள் மீது வீண்பழி சுமத்தலாம்.
குரு 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத்
திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும்
வக்ர கதியில் செல்கிறார். வீண் செலவு, கவலைகள் வந்து போகும்.
வியாபாரத்தில், கடந்த கால நஷ்டங்களை சரி செய்வீர்கள்.
பற்று - வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். அனுபவம், பொறுப்பு மிகுந்த
ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்
செய்வீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் விலகும். ரியல் எஸ்டேட், கணினி
உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், அவமானங்களும் ஏமாற்றங்களும் விலகும்.
உங்களின் உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வர். சக ஊழியர்கள் மத்தியில்
இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர்
பரிசீலிக்கப்படும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து
புது வாய்ப்பு வரும்.
கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு
செல்லும் வாய்ப்பு வரும். மாணவர்கள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன்
வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வார்கள். கலைத்
துறையினரின் புதிய முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால்
வெற்றியடையும். அரசியல்வாதிகளுக்குப் பெரிய பொறுப்புகள் தேடி வரும்;
தேர்தலில் வெற்றி கிட்டும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்வின் அதிர்ஷ்ட அத்தியாயத்தைத் துவக்கிவைப்பதாக அமையும்.
பரிகாரம்: சுவாமிமலை
ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள்.
தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி
பெறுவீர்கள்.
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14
வரையிலும் ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும். மருத்துவப் பரிசோதனை
அவசியம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.
எவருக்காகவும் வாக்கு தவறவேண்டாம். காசோலை தருவதற்குமுன் வங்கி கையிருப்பை
சரிபார்ப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில்,
சாதாரணப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத்
தவிர்க்கவும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்து இடும்போது சட்ட ஆலோசகரை
ஆலோசிக்கவும். உறக்கமின்மை மன அழுத்தம் தரக்கூடும்.
குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தம்பதிக்கு இடையே அன்பு
குறையாது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில்
முடியும். குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மழலை பாக்கியம்
கிட்டும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்
சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். சகோதரர்களால்
அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப்
பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு மருத்துவச்
செலவுகள் குறையும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும்.
வழக்கு சாதகமாகும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும், உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், மறைமுக எதிர்ப்பு, வீண்
செலவுகள், சிறு அவமானம் வந்து செல்லும். கை- காலில் அடிபடலாம். சொத்து
வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்க்கவும். அரசு விவகாரங்களில்
அலட்சியம் வேண்டாம்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் சிறு மனசஞ்சலம், வீண்
டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை வெடிக்கும்.
29.8.13 முதல் 12.11.13 வரை, உங்களின் சப்தம-
ஜீவனாதிபதியான குரு தனது நட்சத்திரமான புனர் பூசத்தில் செல்வதால்,
மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போகவும். கடந்த காலத்தை நினைத்து
வருந்துவீர்கள்.உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம்
நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்
பற்றாக்குறை வந்து செல்லும். சாட்சி- கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
வேலையாட்களால் விரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத தொழிலில் முதலீடு
வேண்டாம். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும்.
உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போகவும். கூடுதல்
நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். வீண் பேச்சுகளைத்
தவிர்க்கவும். நீங்கள் பார்த்த வேலைக்கு வேறுசிலர் உரிமை கொண்டாடுவர்.
எனினும், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னிப்பெண்கள் உயர் கல்வியில் கவனம் செலுத்தவும்.
பெற்றோரை தவறாகப் புரிந்துகொள்ளா தீர்கள். மாணவர்கள், பாட சந்தேகங்களை
உடனுக்குடன் நிவர்த்தி செய்வது நல்லது. சிலர், விடுதியில் தங்கிப் படிக்க
நேரிடும். அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் சிக்கிக்கொள்வதோ, தலைமையைப்
பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினர் புதிய நிறுவனத்தில் ஒப்பந்தம்
செய்து ஏமாற வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களின்
உள்மனத்தில் ஒருவித குழப்பத்தைத் தந்தாலும், பணிவான போக்கால் உங்களுக்கு
வெற்றி தருவதாக அமையும்.
பரிகாரம்:
காஞ்சிபுரம்-உத்திரமேருருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில்
அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். பழைய கல்வி
நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நிம்மதி கிட்டும்.
சமயோசிதமாகவும்
சாதுரியமாகவும் செயல்படுபவர் நீங்கள். குருபகவான் இப்போது 28.5.13 முதல்
12.6.14 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ல் நுழைவதால், சிக்கனமாக இருக்க
நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணவரவும்
உண்டு. சுபச் செலவுகளும் தொடரும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப்
போவது நல்லது. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் பயணிப்பதைத் தவிருங்கள்.
எளிய காரியங்களையும் போராடி முடிக்க வேண்டியது
இருக்கும். எவரிடமும் குடும்ப அந்தரங்க விஷயங்களைச் சொல்லவேண்டாம்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தங்க ஆபரணங்களை
இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். குரு, உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால்
விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டு
லோன் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு
6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி-களின்
நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ஆம் வீட்டைப்
பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளி மாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும்.
பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் கிட்டும். மகளுக்கு நல்ல
வரன், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும்.
26.6.13 முதல் 28.8.13 வரை மற்றும் 27.1.14 முதல்
12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கட்டட
வேலையைத் துவங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். தாயாருக்கு சிறு சிறு
அறுவை சிகிச்சைகள் வந்து போகும். வாகன ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில்
புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் சஷ்டம-
பாக்கியாதிபதியான குரு, தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்
புகழ், கௌரவம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையின் உடல் நலம்
சீராகும். அவர்வழி உறவினர்களுடன் பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை தீரும். 13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர
கதியில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து
வாங்குவீர்கள். செல்வாக்கு உயரும்.
வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். தொழில்
ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். துணி, மின்னணு-
மின்சார சாதனங்கள், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை
அனுசரித்து போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர் களுடன் புது
ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத் தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்
வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். இரண்டாம் கட்ட
அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விருப்பப்பட்ட இடமாற்றம்
உண்டு.
கன்னிப்பெண்களின் கனவு நனவாகும். சிலருக்கு, தடைப்பட்ட
உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலையின் நிமித்தம் பெற்றோரைப்
பிரிவீர்கள். திருமணம் தடைப்பட்டு முடியும். மாணவ-மாணவியர், திறமையை
வெளிப்படுத்தி பரிசு- பாராட்டு பெறுவர். கலைத் துறையினரே! சிறிய
வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்
பூசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய அனுபவங்களை தருவதுடன், ஓரளவு முன்னேற்றம் அளிப்பதாகவும் அமையும்.
பரிகாரம்:
திருச்சி அருகே திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீஎறும்பீஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
துவங்கியதை
முடிக்கும் வரை துவளாதவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை
உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் தொடர்கிறார். வெளிச்சத்துக்கு
வருவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். பல மாதங்களாக கிடப்பில் கிடந்த
வேலைகளையும் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். அந்தஸ்து உயரும்.
தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால்
சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து
முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி
குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக
அமையும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதரர் வகையில்
உதவிகள் கிடைக்கும். ஆடை- ஆபரணம் சேரும். வழக்கில் வெற்றி உண்டு. குரு
5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம்
கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை
புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை
நிறைவேறும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.
வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14
வரையிலும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். பெரிய
திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரையிலும், உங்கள் பூர்வ
புண்ணிய-அஷ்டமாதிபதியான குரு தன் நட்சத்திர மான புனர்பூசத்தில் செல்வதால்,
பண வரவு உண்டு. சொத்து வாங்குவது-விற்பது லாபமாக முடியும். கர்ப்பிணிகள்
படிகளில் ஏறுவது- இறங்குவதோ, கடினப் பொருட்களைத் தூக்குவதோ கூடாது.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம்
தேவை. கடன் தீர புது வழி கிடைக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு, புனர்பூசம்
நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும்
வக்ரகதியில் செல்கிறார். எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். மற்றவர்கள்
விவகாரத்தில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன்
வந்துசெல்லும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் போட்டியாளர் களை
திகைக்கவைப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கை யாளர்கள் ஆவர். பெரிய
நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.
வியாபார சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அமர்வீர்கள். பங்கு தாரர்களால்
இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன்,
புத்தகம், ஷேர், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி
வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல
வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
மாணவர்களுக்கு உயர்கல்வியில் வெற்றி நிச்சயம். கலைத் துறையினரே!
அலட்சியப்படுத்திய நிறுவனம் உங்களை அழைத்து பேசும். கிசுகிசுத் தொல்லைகள்
நீங்கும். அரசு கௌரவிக்கும். அரசியல் வாதிகள் தலைமைக்கு நெருக்கம்
ஆவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகளையும் வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவையாறு
அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி
வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.
சிறந்த
சிந்தனைவாதி நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின்
10-ஆம் வீட்டில் அமர்கிறார். உத்தியோகம், பதவி, கௌரவத்துக்கு பங்கம் வருமே
என்று கலங்கவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வி.ஐ.பி-கள் ஆதரவு
கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமையும். சில தருணங்களில்,
வேலைகளை முடிக்க முடியாமல் மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள். குரு உங்கள்
ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சாதுரியமான பேச்சால் காரியம்
சாதிப்பீர்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்து ஏமாந்த பணம்
வசூலாகும்.
குரு 7-ஆம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால்
தாயாருடனான மோதல்கள் விலகும். அவரது உடல்நலன் சீராகும். வீடு-வாகனம்
வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். குரு 9-ஆம் பார்வையால் 6-ஆம்
வீட்டைப் பார்ப்பதால், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன்
பிரச்னைகளில் ஒன்று தீரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசால்
ஆதாயம் அடைவீர்கள். மகனுக்கு, நல்ல பெண் அமைவாள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-அஷ்டமாதிபதியுமான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் முன்கோபம், திடீர்
செலவு, சொத்துப் பிரச்னை, சகோதர வகையில் வருத்தம் வந்து செல்லும்.
எவரையும் எவரிடமும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது
கவனம் தேவை. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், தெளிவாக முடிவெடுக்க
முடியாமல் குழம்புவீர்கள்.பூர்வீகச் சொத்தை விற்க நேரிடும். கர்ப்பிணிகள்
பயணங்களைத் தவிர்க்கவும்.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை
உங்களின் சுக-சப்தமாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில்
செல்கிறார். தம்பதிக்கு இடையே மனஸ்தாபம் வந்துபோகும். தாயாருடன்
மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள்
வந்துபோகும்.
குரு பகவான் 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூச
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்கிறார். பண வரவு, சொத்துச் சேர்க்கை
உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். புது
வேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் பெரிய முதலீடுகளோ, பெரிய அளவில்
எவருக்கும் கடன் தரவோ வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென பணியை
விட்டு விலகுவர். புதியவர்களை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம்.
பங்குதாரர்கள் ஏடாகூடமாகப் பேசுவர். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ
கெமிக்கல் வகைகளால் லாபம் உண்டு.
உத்தியோகத்தில், உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு
சிலர் முன்னேறுவர். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில்
சிறியவர்களிடம் எல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழல் உருவாகும்.
மேலதிகாரிகளுடன் பணிந்து போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று
தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப்பெண்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத் தில்
இடம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பெற்றோரைப் பகைக்க
வேண்டாம். வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.
மாணவர்களுக்கு, கணிதம் அறிவியல் பாடங்களில் அதீத கவனம்
தேவை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். கட்சி மேலிடம்
உங்களை உற்றுக் கவனிக்கும். கலைத் துறையினர், யதார்த்தப் படைப்புகளால்
புகழ் பெறலாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, பணத்தின் அருமையையும் பொறுமையின் அவசியத்தையும் உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்
அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
முயற்சிகள் பலிதமாகும்.
உண்மையை
நேசிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின்
பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் அமர்கிறார். இனி, தொலைநோக்கு சிந்தனையால்
எதையும் சாதிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை விலகும். பிரச்னைகளை
எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். திடீர் செல்வாக்கும்,
வசதி-வாய்ப்புகளும் கூடும்.
குரு 5-ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால்
புதியத் திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கத் தொடங்குவீர்கள். தம்பதிக்குள்
பிணக்குகள் நீங்கும்; இருவரும் மனம் ஒருமித்து முடிவெடுப்பீர்கள். குழந்தை
பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். குரு 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால்,
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறைந்த வட்டிக்கு கடன்
பெற்று, அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள்
கூடி வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன-சப்தமாதி பதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு
வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். வழக்கு சாதகமாகும்.
பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். மனைவியுடன்
ஈகோ பிரச்னை வரக்கூடும். அவருக்கு கர்ப்பப்பை கட்டி, ஹார்மோன் கோளாறு
வந்து செல்லும். சொத்து விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் நெஞ்சு எரிச்சல்,
வாயுக் கோளாறு, தலை சுற்றல், சிறுநீர் பாதையில் அலர்ஜி வந்துசெல்லும்.
தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.
29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை
உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான
புனர்பூசத்தில் செல்வதால் இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும். முக்கிய
கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். செல்வாக்கு கூடும். சொத்து
சேரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும் வக்ர
கதியில் செல்வதால், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து செல்லும். வேலைகள்,
திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில், வேலையாட்களின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். கடையை
நவீனமாக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள்,
ஏஜென்டுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர் பணிந்து
வருவார். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும்
அறிமுகமாவார். ரியல் எஸ்டேட், சிமெண்ட், கண்ணாடி வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், உங்கள் திறமைக்கு அங்கீகாரம்
கிடைக்கும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.
சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளி நிறுவனங்களில் நல்ல
வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
கன்னிப்பெண்களுக்கு கல்யாணம் கூடிவரும். புது வேலை
கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை
வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாணவ-மாணவியருக்கு உயர்கல்வியில்
வெற்றி உண்டு. விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். அரசியல்வாதிகள்
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு
நல்ல வரவேற்பு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கான அங்கீகாரத்தை தருவதுடன், பணம்- பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னைக்கு
தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும்,
நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு
உதவுங்கள். செழிப்பு கூடும்.
தனக்கென
தனிப்பாதை அமைத்துக் கொள்பவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல் 12.6.14
வரை 8-ஆம் வீட்டில் மறைவதால், உங்கள் இலக்கை எட்டிப்பிடிக்க கடும் முயற்சி
தேவை. தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்; அவ்வப்போது விவாதங்களும்
எழும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். சில வேலைகளை நீங்களே முடிப்பது
நல்லது. பழைய கடன் பிரச்னை மனதை வாட்டும். ஸ்திர ராசியில் பிறந்த
உங்களுக்கு குரு உபய வீட்டில் மறைவதால் நல்லதே நடக்கும்.
குரு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வர வேண்டிய பணம்
கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மனைவிவழி உறவினர் மத்தியில்
மதிக்கப்படுவீர்கள். வீட்டு பிளான் அப்ரூவலாகும். பூர்வீகச் சொத்தை
மாற்றி, ரசனைக்கேற்ற வீடு வாங்குவீர்கள். ஆபரணங்கள் சேரும். குரு உங்கள்
சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோர்வு நீங்கும். தாயாரின் உடல்நிலை
சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட
நட்சத்திரத்தில் குரு செல்வதால் தோற்றப்பொலிவு, பேச்சில் கம்பீரம்
பிறக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்குவீர்கள். குழந்தை பாக்கியம்
கிடைக்கும். பாதி பணம் தந்திருந்த சொத்துக்கு மீதி பணமும் தந்து
பத்திரப்பதிவு செய்வீர்கள்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனோபலம்
அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விழாக்களில் முதல் மரியாதை
கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவியின்
நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
29.8.13 முதல் 26.1.14 மற்றும் 13.4.14 முதல் 12.6.14
வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தனது நட்சத்திரமான
புனர்பூசத்தில் செல்கிறார். எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பி-களின் நட்பு
கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம்
அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும்,
27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால்,
உங்களின் பலவீனங்களை மாற்றிக்கொள்ள முடிவு எடுப்பீர்கள். பிரிந்திருந்தவர்
ஒன்று சேருவர். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப் படுவீர்கள்.
சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரி யின் திருமணத்தை நடத்துவீர்கள்.
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில்
நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப்
போட்டிகள் அதிகரிக்கும். எவருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். சந்தை
நிலவரத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். சொந்த இடத்துக்கு கடையை
மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை
செலுத்துவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களின் கெடுபிடிகள் விலகும்.
மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிக்கல்ஸ், துரித உணவகங்களால் லாபம்
உண்டு. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட
அதிகாரி, இனி ஆதரிப்பார். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ
வேண்டாம்.
கன்னிப்பெண்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும். திருமணம் தாமதமாகி முடியும். மாணவர்களுக்கு போட்டிகளில் பரிசு
கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரிப்பர். கலைத் துறையினருக்கு பெரிய
நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். அரசியல்வாதிகள், எதிர்ப்புகளைத்
தாண்டி சாதிப்பர்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவு மற்றும் அலைச்சலைத் தந்தாலும், உங்களை மகிழ்ச்சிப் படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்:
கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். முதியோர் இல்லங்களுக்கு
உதவுங்கள். வளம் பெருகும்.
வெளிப்படையாகப்
பேசுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்கள் ராசிக்கு
7-ஆம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால், திறமைகளை
வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு
காண்பீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேருவர். குழந்தை பாக்கியம்
கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். புறநகரில் மனை வாங்குவீர்கள்.
கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய
நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின்
ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம்
வரும். மூத்த சகோதரர்களால் உதவிகள் கிட்டும். உங்கள் ராசிக்கு 3-ஆம்
வீட்டை குரு பார்ப்பதால், மதிப்பு உயரும். கோயில் கும்பாபிஷேகத்தை
முன்னின்று நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் -
விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால்
திடீர் யோகம் உண்டாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கடன் பிரச்னை
தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள். சகோதரர்கள் உங்கள்
உதவியை நாடுவர்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ்,
கௌரவம் கூடும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி, அரசால்
அனுகூலம் உண்டு. வெளி நாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.
மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் ராசிநாதனும் -
சுகாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்,
வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு
வரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு
களைகட்டும். தாயாரின் முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். புது வேலை
கிடைக்கும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசத்திலும்
27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர கதியில் செல்வதால்,
நினைத்தது நிறைவேறும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். பூர்வீகச்
சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர், வசதியுள்ள
வீட்டுக்கு மாறுவார்கள்.
வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய
வாய்ப்புகளும் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவர். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள்
நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தகச் சங்கத்தில் பதவி கிடைக்கும்.
புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் ஓயும்.
பெட்ரோல், மருந்து, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மாறுபட்ட
அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற
அங்கீகாரம் கிட்டும். நீண்டநாளாகக் கேட்டுக்கொண்டிருந்த இடமாற்றம் கேட்ட
இடத்துக்கே கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி
வரும்.
கன்னிப்பெண்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெறுவார்கள். இசை, இலக்கியம், ஓவிய போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைத்
துறையினர் வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் பெறுவர். அவர்களின் படைப்புத்
திறன் வளரும். அரசியல்வாதிகளுக்கு, தலைமை ரகசிய பொறுப்பு ஒன்றை
ஒப்படைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை விஸ்வரூபம்
எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் வல்லமையையும் தருவதாக
அமையும்.
பரிகாரம்:
திருநாங்கூர்-அண்ணன்கோவிலில் அருளும் ஸ்ரீகண்ணன் நாராயண பெருமாளையும்
தாயாரையும் ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை கர்ப்பிணிகளின்
பிரசவ செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். வளம் பெருகும்.
பெற்ற
தாய்- பிறந்த மண் மீது அதீத பற்று கொண்டவர் நீங்கள். குரு பகவான் 28.5.13
முதல் 12.6.14 வரை 6-ஆம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன எதிர்ப்புகள்
வரும். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் உண்டு. சகட குருவாக இருப்பதால்
குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்-மனைவிக்குள்
விட்டுக்கொடுத்து போகவும். மருத்துவச் செலவுகளும் வந்து போகும். வழக்கை
நினைத்து கவலை அடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையை அறவே அகற்றுங்கள். பழைய
கடனை நினைத்துக் கலங்குவீர்கள். சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். கவனம்
தேவை.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட
நட்சத்திரத்தில் குரு செல்வதால், தடைகள் ஓரளவு நீங்கும். முக்கிய பதவி,
பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
பழைய கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு- வாகன வசதி பெருகும்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், கடனாகக் கேட்ட
இடத்தில் பணம் கிடைக்கும். மதிப்பு கூடும். திருமணம் கூடி வரும்.
புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சிப்பீர்கள்.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14
வரை, உங்களின் திருதியாதி பதியும்-விரயாதிபதியுமான குரு, தனது
நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், தள்ளிப்போன சுபகாரியங்கள்
கூடிவரும். பணத்தட்டுப்பாடு இருக்கும். பிள்ளை களால் அலைச்சலும்,
செலவுகளும் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும்.
எவரையும் எவருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை
கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம்
வேண்டாம். இளைய சகோதரர் உதவுவார்கள்.
13.11.13 முதல் 26.1.14 வரை, குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும் 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு எதிர்பார்த்த
வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும்.
வெளிவட்டாரத்தில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
வியாபாரம் சுமார்தான். மற்றவர்களை நம்பி பெரிய
முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை, விளம்பர யுக்திகளால் லாபம்
அதிகரிக்கச் செய்வீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். அரசாங்கத்தை
பகைக்காதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி,
பதிப்பகங்களால் லாபம் அடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம்
என்று செல்லாமல், பேசி தீர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த
அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். எல்லா நேரமும் கறாராகப்
பேசாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவலகம்
சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
கன்னிப் பெண்களுக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில்
அமர்வீர்கள். மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது
அவசியம். நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து போகவும். கலைத் துறையினரின் புது
முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். அரசியல்வாதிகள்,
கோஷ்டி பூசலாலும், எதிர்க்கட்சியின ராலும் அலைக்கழிக்கப்படுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஏமாற்றம் மற்றும் பணப்பற்றாக்குறையை தந்தாலும், ஓரளவு முன்னேற்றத்தை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.
மறப்போம்,
மன்னிப்போம் எனும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 28.5.13 முதல்
12.6.14 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ஆம் வீட்டில் அமர்வதால் வசதி
வாய்ப்புகளையும், வாழ்க்கை தரத்தையும் ஒரு படி உயர்த்துவார். சந்தோஷம்
பெருகும். குடும்பத்தில் வசந்தம் வீசும். குழந்தை இல்லாத தம்பதிக்கு
குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள்
கூடிவரும். தாயாருக்கு இருந்த நோய் குணமடையும். பிள்ளைகளின் உயர்கல்வி,
உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். பூர்வீகச்
சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு
கிடைக்கும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் ரசனை மாறும்.
சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு 5-ஆம் பார்வையால் உங்களின் 9-ஆம்
வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடனான மனத்தாங்கல் நீங்கும். அவர் வழி
உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். வெளிநாடு சென்று வருவீர்கள்.
11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதர-சகோதரிகள் ஆதரவாக இருப்பர்.
வழக்கு சாதகமாகும். நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-ஜீவனாதிபதியுமான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். இடம் வாங்க
முயற்சிப்பீர்கள். வேலை அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும்
உதவ வேண்டாம். 26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்காலம் குறித்த
பயம், வந்துசெல்லும். வீட்டில் கூடுதல் அறை, தளம் கட்டும் முயற்சிகள்
பலிதமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.
29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் தன- லாபாதிபதியான
குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், புதிய முயற்சிகள்
வெற்றியடையும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். சுப
நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பொறுப்புகள் தேடி வரும். மகளுக்கு
வேலை கிடைக்கும்; திருமணமும் கூடி வரும்.
குரு 13.11.13 முதல் 26.1.14 வரை, புனர்பூசத்திலும்
27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ரகதியில் செல்கிறார். இந்த
காலகட்டத்தில் மனக் குழப்பம் அதிகரிக்கும். எனினும் வளர்ச்சி தடைப்படாது.
உங்களைப் பற்றி விமர்சனங்கள் வரக்கூடும். காசோலை, முக்கிய கோப்புகளைக்
கையாளும்போது அலட்சியம் வேண்டாம். அரசு விஷயங்களிலும் கவனம் தேவை.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேங்கிய சரக்கு களை
தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புது முதலீடுகள் செய்து
வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள்.
கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு.
பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பர். உத்தியோகத்தில், உங்களை
அலைக்கழித்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சில புதுமைகளைச்
செய்து எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.
புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வழக்கில் வெற்றி உண்டு. கன்னிப்
பெண்களின் கனவு நனவாகும். அடி வயிற்றில் இருந்த வலி, தூக்கமின்மை
விலகும்.கல்யாணம் கூடி வரும். மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில்
மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி
கிட்டும்.
கலைத் துறையினரே! வெகுநாட்களாக எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிலும் வெற்றி பெறுவர்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி செல்வம், செல்வாக்கு, திடீர் யோகங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும்,
குரு பகவானையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். மனவளம்
குன்றியவர்க்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
வாழ்க்கை
வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர் நீங்கள். குரு இப்போது 4-வது வீட்டில்
அமர்கிறார். முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான
குரு 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள்
மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். திருமணம், கிரகப்பிரவேசத்தை போராடி
முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில்
ஈடுபடாதீர்கள். அப்ரூவல் இல்லாமல் வீடு கட்ட துவங்க வேண்டாம். வங்கி
லோனும் தாமதமாகவே கிடைக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும். தாயாருக்கு
மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சு வலி,
கை, கால் வலி வந்துபோகும். பண வரவும் உண்டு; செலவும் உண்டு. வாகன
இன்சூரன்ஸ் போன்றவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
விபத்துகள் வந்துபோகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்
வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை குறித்து நல்ல பதில்
வரும். சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரிபார்க்கவும்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் தன- பாக்கியாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு திருப்திகரமாக
இருக்கும். அரசு பதவியில் இருப்பவர்களின் உதவியால், தடைப்பட்ட காரியங்களை
சாதிப்பீர்கள். புறநகர் பகுதியிலாவது வீடு- மனை வாங்கலாம் என
முயற்சிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தந்தையின் உடல்
நிலை சீராகும். அவர் வழி சொத்தை பெறுவதில், தடைகள் நீங்கும். சுப
நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் மதிப்பு- மரியாதை கூடும்.
26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில்
அவ்வப்போது சச்சரவு எழும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.
தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். எவரையும் எவருக்கும் சிபாரிசு
செய்யாதீர்கள். வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு.
29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14
வரை, உங்களின் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குரு, தனது நட்சத்திரமான
புனர்பூசத்தில் செல்கிறார். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.
தடைப் பட்ட சுபகாரியங்கள் கூடிவரும். பிள்ளைகளின் கல்வி, உத்தியோகம்
மற்றும் திருமண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரைகுறையாக நின்ற
கட்டட பணியை மீண்டும் துவங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூச
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும்
வக்ரகதியில் செல்வதால் வசதி- வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில்
நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். விளம்பர
யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். புது ஏஜென்சியை யோசித்து
எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு,
கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் லாபம் வரும்.
உத்தியோகத்தில் வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருக்கும்.
சம்பளம் உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகக் கிடைக்கும்.
கன்னிப்பெண்கள், தங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து
செயல்படுவது நல்லது. மாணவர் களுக்கு கல்வியில் அலட்சியம் வேண்டாம். கலைத்
துறையினருக்கு, பணவரவு சுமார்தான். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை
அழைத்துப் பேசும். அரசியல்வாதிகள் தடைகள், எதிர்ப்புகளைத் தாண்டி
முன்னேறுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அலைக்கழிப்பை தந்தாலும் இறுதியில் மனத்தெளிவும் முன்னேற்றமும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை
நாளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள்
பலிதமாகும்.
பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்
ஸ்காந்த
புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால்
வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம்,
தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய
இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்...
அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.
ஸ்ரீ கணேஸாய நம:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:
குருர்ப்ருஹ ஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:
கருத்து:
குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு
ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி
ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம்
உள்ளவரும்,அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத்
தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு
இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத்
தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும், உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும்,
நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய
புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும்
குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும்,
ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100
ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும்.
எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று
சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் - இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான
உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு
போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும்
விலகும்.
நன்றி : சக்தி விகடன்
Read more: http://www.livingextra.com/#ixzz2Sd4fXSnc
Comments
Post a Comment